Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி டெஸ்டில் இந்திய அணியில் மாற்றம்.. பேட்டிங்கை பலப்படுத்த ரோகித் திட்டம்.. அப்போ யார் வெளியே?

அகமதாபாத் : இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவை விட இந்திய அணிக்கு தான் மிகவும் முக்கியம் ஆகும். காரணம், ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுவிட்டது.

இந்திய அணியின் தலையில் தான் கத்தி தொங்கி கொண்டுள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சில் எந்த குறையும் இல்லை. பிரச்சினையே பேட்டிங்கில் தான் இருக்கிறது.

 பந்துவீசவே இல்லை

பந்துவீசவே இல்லை

இதனால் இந்திய அணி தங்களுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்த பல நடவடிக்கை எடுக்க உள்ளது. பந்துவீச்சில் இந்திய அணி அக்சர் பட்டேலையும், 2 வேகப்பந்துவீச்சாளர்களையும் மிகவும் குறைவாகவே பயன்படுத்துகிறது. இதில் முகமது சிராஜ் இந்தூர் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 6 ஓவர் தான் வீசினார். இரண்டாவது இன்னிங்சில் பந்துவீசவே இல்லை.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இதனால், முகமது சிராஜை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க இந்தியா முடிவு எடுத்துள்ளது. அது சூர்யகுமாரா இல்லை கேஎல் ராகுலா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இதே போன்று கேஎஸ் பரத் விக்கெட் கீப்பிங்கில் பட்டையை கிளப்பினாலும் பேட்டிங்கில் சொதப்புகிறார்.

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

இதனால் கேஎஸ் பரத்தை நீக்கிவிட்டு, இஷான் கிஷனை அணியில் சேர்க்க ரோகித் சர்மா முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் இஷான் கிஷன், அவருக்கு மாற்று வீரராக நல்ல தேர்வாக இருப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கருதுகின்றனர்.

ஜடேஜா

ஜடேஜா

இதே போன்று ஜடேஜாவை நடுவரிசையில் களமிறக்கும் முடிவும் இந்திய அணிக்கு கை கொடுக்கவில்லை. இடது, வலது பேட்ஸ்மேன் களத்தில் நிற்க இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், ஜடேஜா கீழ்வரிசையில் தான் சிறப்பாக விளையாடுவதால், அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Story first published: Monday, March 6, 2023, 15:52 [IST]
Other articles published on Mar 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+