For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வங்கதேசத்தைத் தொடர்ந்து ஜிம்பாவேவுக்கு அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி சுற்று பயணம்

By Mathi

டெல்லி: வங்கதேச தொடரைத் தொடர்ந்து ஜிம்பாப்வேவில் அடுத்த மாதம் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. வங்கதேசத்தில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இன்று பதுலாவில் தொடங்கியுள்ளது.

India to play 3 ODIs, 2 T20s in Zimbabwe next month

இந்த சுற்றுப் பயணம் வரும் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து ஜூலை 7-ந் தேதி இந்திய அணி, ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

இது தொடர்பாக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் அணியின் தற்போதைய இயக்குநருமான காம்பெல் தமது ட்விட்டர் பக்கத்தில், ஜூலை 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை இந்திய அணி ஜிம்பாப்வேயில் விளையாடுகிறது. 3 ஒருநாள் போட்டிகள், 2 டி20 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடும் எனத் தெரிவித்துள்ளார்.

இப்போட்டிகளுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு கோஹ்லி தலைமையில் ஜிம்பாப்வே சென்ற இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 10, 2015, 16:46 [IST]
Other articles published on Jun 10, 2015
English summary
Indian cricket team will travel to Zimbabwe next month to play 3 One Day Internationals and 2 Twenty20s, Zimbabwe Cricket (ZC) announced on Wednesday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+