Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஷாந்த் சர்மாவின் டெஸ்ட் பயணம் முடிகிறதா?.. இளம் வீரரால் வந்த சோதனை.. முடிவை இறுதி செய்த கோலி!

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சீனியர் வீரர் இஷாந்த் சர்மாவை குறித்து விராட் முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் டிசம்பர் 26ம் தேதி நடக்கிறது.

செஞ்சூரியனில் நடைபெறும் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு முறை கூட இந்திய அணி தொடரை வென்றதில்லை. எனவே இந்த முறை அந்த வரலாற்றை மாற்றி அமைக்க பிசிசிஐ முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணி தேர்வு செய்யப்பட்டது.

ப்ளேயிங் 11 என்ன?

ப்ளேயிங் 11 என்ன?

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிகான ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்ற குழப்பம் எழுந்துள்ளது. குறிப்பாக போட்டி நடைபெறும் செஞ்சூரியன் பிட்ச்-ல் புற்கள் அதிகம் இருப்பதால் பேட்டிங் எடுபடாது. பவுலிங்கில் தான் முழு திறணையும் காட்டியாக வேண்டும். இதில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் முதன்மை தேர்வாக இருக்கிறார்கள். இதே போல ஷர்துல் தாக்கூர் ஆல்ரவுண்டராக தேவைப்படுவார் என்பதால் அவரும் தேர்வாகிவிடுவார்.

கோலி எடுத்த முடிவு

கோலி எடுத்த முடிவு

கடைசியாக இருக்கும் ஒரே ஒரு இடத்திற்கு தான் இஷாந்த் சர்மா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் போட்டிபோட்டு வருகின்றனர். தென்னாப்பிரிக்கா போன்ற களங்களில் நல்ல வேகமும், பவுன்சர்களும் உதவும். அதன்படி சீனியர் வீரர் இஷாந்த் சர்மா தான் அங்கு பொருத்தமாக இருப்பார். ஆனால் முகமது சிராஜுக்கு தான் வாய்ப்பு கொடுக்க கோலி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இஷாந்த் எதிர்காலம்

இஷாந்த் எதிர்காலம்

இஷாந்த் சர்மாவின் தற்போதைய ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. கடைசியாக விளையாடிய நியூசிலாந்து டெஸ்டில் கூட பெரியளவில் விக்கெட் எடுக்கவில்லை. 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. மறுபுறம் இளம் வீரர் முகமது சிராஜ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தொடர்ச்சியாக கலக்கி வருகிறார். இதனால் இஷாந்துக்கு பதிலாக சிராஜ் தான் இருப்பார் எனத்தெரிகிறது. இப்படிபட்ட களத்திலேயே இஷாந்துக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் இனி இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு இருக்குமா என்பது சந்தேகமே.

Story first published: Monday, December 20, 2021, 18:58 [IST]
Other articles published on Dec 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+