Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20.. இந்திய அணியின் பிளேயிங் லெவன்.. யாருக்கு வாய்ப்பு

மொஹாலி: இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி வரும் 20ஆம் தேதி முதல் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதற்கான ஆஸ்திரேலிய அணி, இந்தியா புறப்பட்டு வந்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக இந்த தொடர் கருதப்படும்.

இந்திய அணி, தங்களது பிளேயிங் லெவனை தீர்மானித்து கொள்ள இந்த தொடரை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஎல் ராகுல் உறுதி

கேஎல் ராகுல் உறுதி

கேஎல் ராகுலை வெளியே அமர வைத்துவிட்டால், பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் சிக்கல் இருக்காது. ஆனால் அவர் அணியின் துணை கேப்டன் என்பதால், அவருக்கு காயம் ஏற்படாத வகை, அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் ரோகித், ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என டாப் 4 வீரர்களின் எந்த மாற்றமும் இருக்காது.

பெரும் தலைவலி

பெரும் தலைவலி

பொதுவாக ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 2 இடதுகை பேட்ஸ்மேன்களாவது இருப்பார்கள். ஆனால், இந்தியாவின் பிளேயிங்லெவனில் பண்ட் மட்டும் தான் இருக்கிறார். ஆனால் அவர் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடுவது இல்லை. இதனால், ஃபினிஷர் ரோலில் தினேஷ் கார்த்திக்கை பயன்படுத்த வேண்டும். பண்டா, கார்த்திக்கா என்ற குழப்பம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால், ஹர்திக், கார்த்திக் அல்லது பண்ட், என்ற அளவிலேயே தற்போது நிலைமை இருக்கிறது.

ஜடேஜாவுக்கு பதில் யார்?

ஜடேஜாவுக்கு பதில் யார்?

ஜடேஜாவுக்கு பதில் அக்சர் பட்டேலா அல்லது தீபக் ஹூடாவா என்ற குழப்பமும் நீடிக்கிறது. இல்லை எனில் தமிழக வீரர் அஸ்வினுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம். 2வது சுழற்பந்துவீச்சாளராக சாஹல் இடம் பிடிப்பார். 3 வேகப்பந்துவீச்சாளராக புவனேஸ்வர்குமார், பும்ரா, ஹர்சல் பட்டேல் இடம் பிடிப்பார்கள். இதில் ஹர்திக்கை 3வது வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்தினால், ஒரு சுழற்பந்துவீச்சாளர் அல்லது ஒரு பேட்ஸ்மேன் கூடுதலாக கிடைப்பார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5. ஹர்திக் பாண்டியா, 6, தினேஷ் கார்த்திக் / ரிஷப் பண்ட், 7, அக்சர் பட்டேல் / தீபக் ஹூடா, 8, ஹர்சல் பட்டேல் / அஸ்வின், 9, புவனேஸ்வர் குமார், 10, பும்ரா, 11, சாஹல்

Story first published: Thursday, September 15, 2022, 15:01 [IST]
Other articles published on Sep 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+