Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் மாற்றம்.. கேஎஸ் பரத்துக்கு அடித்த லக்..பயிற்சி ஆட்டத்தில் முயற்சி

லெஸ்டர்: இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஜோடி மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் கடந்த ஆண்டு விளையாடினர்.

இம்முறை கேஎல் ராகுல் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சுப்மான் கில் மாற்று வீரராக களமிறக்கப்படலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

இதனையடுத்து லெஸ்டர்சைர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித், சுப்மான் கில் 20 ரன்களை தாண்டி ஆட்டமிழந்தனர்.

2 விக்கெட் கீப்பர்கள்

2 விக்கெட் கீப்பர்கள்

ஆனால், அந்த இன்னிங்சில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தார். 111 பந்துகளை எதிர்கொண்ட பரத், 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதே போன்று ரிஷப் பண்ட்டும் அதிரடியாக விளையாடி 76 ரன்கள் குவித்தார்.

விட்டு கொடுத்த ரோகித்

விட்டு கொடுத்த ரோகித்

மற்ற இந்திய அணி வீரர்கள் சொதப்பினர். இதனையடுத்து விக்கெட் கீப்பராக ஏற்கனவே ரிஷப் பண்ட், உள்ளதால் கேஎஸ் பரத்துக்கு எங்கே வாய்ப்பு கொடுப்பது என தெரியவில்லை. இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தின் 2வது இன்னிங்சில் கேஎஸ் பரத்தை ரோகித் சர்மா தனது இடத்தை விட்டு கொடுத்து ஓப்பனிங் இறங்க வாய்ப்பு கொடுத்தார்.

சுப்மான் 38 ரன்கள்

சுப்மான் 38 ரன்கள்

இதனை பயன்படுத்தி கொண்ட கேஎஸ் பரத் , இரண்டாவது இன்னிங்சிலும் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் சுப்மான் கில் அதிரடியாக விளையாட முற்பட்டு 34 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். ஆனால், கேஎஸ் பரத், டெஸ்ட் இன்னிங்ஸ்க்கு ஏற்றவாறு பந்தை பழசாக்கும் முயற்சியில் இறங்கினார்.

கேஎஸ் பரத் பொறுப்பான ஆட்டம்

கேஎஸ் பரத் பொறுப்பான ஆட்டம்

தற்போது வரை 72 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த கேஎஸ் பரத் 5 பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 85 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்தது. முதல் இன்னிங்சில் சொற்ப ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகியோருக்கு, 2வது இன்னிங்ஸ் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் அவர்கள் திறமையை வெளிப்படுத்தினால் தான், பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும்.

Story first published: Saturday, June 25, 2022, 18:13 [IST]
Other articles published on Jun 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+