2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு போக இந்தியா எத்தனை போட்டிகள் ஜெயிக்கணும்?
மும்பை: இந்திய அணி இலங்கையுடன் இரண்டு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வரும் நிலையில், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன? எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்? என்று பார்க்கலாம்.
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 48.15 சதவீத புள்ளிகளுடன் 5வது இடத்தில் பின்தங்கியுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி மற்றும் 1 டிராவுடன் 52 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா 87.5 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 75 சதவீதத்துடன் 2வது இடத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. அதற்கு முன் இந்திய அணிக்கு இன்னும் 9 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன. இதில் இலங்கைக்கு எதிராக 2 போட்டிகள், வரும் நவம்பரில் நியூசிலாந்து மண்ணில் 2 போட்டிகள் மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற ஒரு அணிக்கு குறைந்தபட்சம் 60 சதவீத புள்ளிகள் தேவைப்படும். இந்த இலக்கை எட்ட இந்திய அணி மீதமுள்ள 9 போட்டிகளில் இருந்து குறைந்தது 78 புள்ளிகளை கட்டாயம் பெற வேண்டும். டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு 12 புள்ளிகளும், டிராவுக்கு 4 புள்ளிகளும் வழங்கப்படும். எனவே, இனிவரும் போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளுக்கு மேல் தோற்கக் கூடாது. ஒருவேளை 3 போட்டிகளில் தோல்வியடைந்தால் அதிகபட்சமாக 72 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அது இந்தியாவின் இறுதிப்போட்டி கனவை தகர்த்துவிடும்.
இந்திய அணி மீதமுள்ள போட்டிகளில் 6 வெற்றிகள் மற்றும் 2 டிராக்களை பதிவு செய்தால் 61.11 சதவீத புள்ளிகள் பெறும். அதேபோல் 7 வெற்றிகளைப் பெற்றால் 62.96 சதவீத புள்ளிகள் பெறும். இந்த சூழலில் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து இந்திய அணிக்கான இறுதிப்போட்டி வாய்ப்பு அமையும்.
ஒருவேளை மீதமுள்ள அனைத்து 9 போட்டிகளிலும் வென்றால் அதிகபட்சமாக 74.07 சதவீத புள்ளிகளை அடைய முடியும். அப்போது இந்திய அணி உறுதியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளை அடுத்து எதிர்கொள்வதால் தற்போதைய எளிதான இலங்கை டெஸ்ட் தொடர் சற்று எளிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட உள்ள 7 போட்டிகளிலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியுமா? என்பது கேள்விக் குறியே. எனவே, இலங்கை டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளையும் வென்றால் மட்டுமே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைக்கும் என்று கருதலாம்.


Click it and Unblock the Notifications

