இலங்கை அணியை போல ஆஸி.யை டீல் செய்யும் இந்தியா.. ஒய்ட் வாஷ் கேரண்டி?
பெங்களூரு: இலங்கை அணிக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரில், 5-0 என ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி, அடுத்த ஒயிட்வாஷ் செய்வதற்கு தயாராகிவிட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே, பெங்களூருவில் நாளை நடக்க உள்ள 4வது ஒருதினப் போட்டியில் வெற்றி பெற இந்தியா தயாராக உள்ளது.
5 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வந்துள்ளது. சென்னை, கோல்கத்தா, இந்தூரில் வென்று தொடரை வென்றுள்ள கேப்டன்கள் டோணி, கோஹ்லி அணியிலான இந்திய அணி, பெங்களூருவில் நாளை நடக்கும் 4வது போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது.
சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரில், 5-0 என்ற கணக்கில் தொடரை வென்ற இந்திய அணி, அடுத்த ஒயிட்வாஷ் வெற்றியைப் பெற வேண்டும் என்று மிகவும் வேகமாக உள்ளது.

அனைத்து துறைகளும் டாப்
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்து துறையிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்தியாவுக்கு எதிராக இலங்கை செய்த தவறுகளையே, ஆஸ்திரேலியா அணியும் செய்து வருகிறது.

பேட்டிங் அபாரம்
ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கரை நம்பியே இந்திய அணி இருந்தது. ஆனால், தற்போதைய இந்திய அணியில் அனைத்து வீரர்களுமே சிறப்பாக விளையாடி வருகிறது. அனைத்து வீரர்களின் பேட்டிங் சராசரி, 40 சதவீதத்தையும் விட அதிகமாக உள்ளது.

புது வீரர்களுக்கு வாய்ப்பு
2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில், இந்தத் தொடர்கள் அமைந்துள்ளது. ஏற்கனவே தொடரை வென்றுள்ளதால், இதுவரை விளையாடாத வீரர்களுக்கு கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் என, எதிர்பார்க்கலாம்.

கலக்கல்
2015ல் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு, இந்தியா இதுவரை, 45 ஒருதினப் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 29ல் வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றிப் பயணம் பெங்களூருவிலும் தொடரும் என கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications