இது 4வது பட்டம்.. ஜமாய்த்த இந்திய ஹாக்கி அணி!
டெல்லி: ஆசியக் கோப்பை ஹாக்கியில் பட்டம் வென்றதன் மூலம் ஆசியாவில் நடக்கும் நான்கு விதமாக ஹாக்கி போட்டிகளில் பட்டங்களை வென்ற புதிய சாதனையை இந்தியா ஹாக்கி அணி புரிந்துள்ளது.
ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வங்கதேசத்தில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், இந்தியா அனைத்துப் போட்டிகளிலும் வென்றது. தென்கொரியாவுடன் மட்டும் டிரா செய்தது.
நேற்று நடந்த பைனலில் மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக ஆசியக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. 2007ல் சென்னையில் ஆசியக் கோப்பையை வென்ற பிறகு, தற்போதுதான் இந்தியாவுக்கு ஆசியக் கோப்பை கிடைத்துள்ளது.

புதிய கோச்சால் முதல் வெற்றி
ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் கோச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, மகளிர் ஹாக்கி அணியின் கோச்சாக இருந்த ஜோயர்டு மரிஜ்னே, ஆடவர் அணியின் கோச்சாக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்றப் பிறகு நடக்கும் முதல் சர்வதேச போட்டியிலேயே இந்தியா கோப்பையை வென்றுள்ளது.

இந்தியாவுக்கு 4வது ஆசிய பட்டம்
இதன் மூலம் ஆசியாவில் நடக்கும் ஆசியன் கேம்ஸ், ஆசியக் கோப்பை, ஆசியன் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை ஆகிய நான்கு முக்கிய பட்டங்கள் இந்தியாவிடம் உள்ளது.

உலகக் கோப்பைக்கு தயார்
2018ல் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு, போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இந்தியா தகுதி பெற்றிருந்தது.

உலகக் கோப்பையும் கிடைக்குமா
தற்போது ஆசியக் கோப்பையை வென்றதாலும், உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஆசியக் கோப்பைக்கு அடுத்ததாக, உலகக் கோப்பையையும் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications