Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விட்ட இடத்தை பிடித்த இந்தியா.. ஐசிசி டி20 ரேங்கிங் அதிரடி.. இங்கிலாந்தை முந்தி மீண்டும் நம்பர் 1

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த மாபெரும் வெற்றியின் மூலம் ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி இந்திய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறது.

ஜிம்பாப்வே தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஆடியது இந்திய அணி. அந்த தொடர்களில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் அதிர்ச்சி அளித்தது.

அதனால் 2022 முதல் டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு சென்றது. தற்போது ஜிம்பாப்வே தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வென்றதன் மூலம் மீண்டும் தரவரிசையில் முதல் இடத்தை கைப்பற்றியது இந்திய அணி.

India reclaims number 1 spot in ICC T20I rankings after series win against Zimbabwe

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது போட்டியில் டாஸ் இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்தில் தடுமாறியது. அபிஷேக் சர்மா 8 ரன்கள், வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த திலக் வர்மாவுடன் இணைந்து இஷான் கிஷன் ஜிம்பாப்வே பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 31 பந்துகளில் அரைசதம் கடந்து, மொத்தமாக 81 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாகத் தனது அரைசதத்திற்குப் பிறகு வெறும் 13 பந்துகளில் 31 ரன்களை விளாசி அதிரடி காட்டினார். மற்றொரு முனையில் திலக் வர்மா 23 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து 60 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது.

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அதிரடி தொடக்கம் தந்தார். ஆனால், இந்திய அணியின் அறிமுக பந்துவீச்சாளர் யாஷ் தாக்குர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

"என் டீமை ஏமாத்திக்கிட்டே இருக்கேன்..".. படுதோல்விக்கு பின் தன் மீதே பழியை போட்டுக்கொண்ட ZIM கேப்டன்

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி, 9 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது. பகுதிநேர பந்துவீச்சாளர்களான அபிஷேக் சர்மா 3 விக்கெட்டுகளையும், திலக் வர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். ஜிம்பாப்வே அணி 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

Story first published: Sunday, July 26, 2026, 6:20 [IST]
Other articles published on Jul 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+