ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்தது இந்தியா!
டெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 125 புள்ளிகள் பெற்று ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டது.
ஐசிசி வெளியிடும் டெஸ்ட் போட்டிகளுக்கான திருத்தப்பட்ட தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில், 2014-15 சீசனில் நடந்த போட்டிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதே நேரத்தில் அந்த ஆண்டுக்கான ஆட்டங்களுக்கு ஏற்ப தகுதி மதிப்பெண்கள் ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்பட்டுள்ளது. 2015-16, 2016-17 சீசன்களில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இந்தியா கூடுதலாக 4 புள்ளிகளைப் பெற்று, 125 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

தென்னாப்பிரி்க்கா 5 புள்ளிகளை இழந்து, 112 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. ஆஸ்திரேலியா 106 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், நியூசிலாந்து 102 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து 5, இலங்கை 6, பாகிஸ்தான் 7, வங்கதேசம் 8, வெஸ்ட் இண்டீஸ் 9, ஜிம்பாப்வே 10வது இடத்தில் உள்ளன.
பேட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இரண்டாவது இடத்தில் உள்ளார். பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா 4, ரவிச்சந்திரன் அஸ்வின் 5வது இடத்தில் உள்ளனர். ஆல்-ரவுண்டர்களில் ஜடேஜா 2வது இடத்திலும் அஸ்வின் 4வது இடத்திலும் உள்ளனர்.
ஒருதினப் போட்டியைப் பொருத்தவரை, இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதிலும் தென்னாப்பிரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அதற்கடுத்த இடங்களில் உள்ளன.
ஒருதினப் போட்டி பேட்டிங்கில் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் உள்ளார். டி-20 தரவரிசையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications