For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோத்தாலும் ஜெயிச்சாலும்.. மீசையை முறுக்கு.. ரேட்டிங்கில் இந்தியாதான் தொடர்ந்து நம்பர் 1!

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியுற்றாலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 360 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Recommended Video

IND VS NZ TEST SERIES 2020 | Kohli got anger with journalist

இந்நிலையில் இந்தியாவுடன் பெற்ற தொடரின் வெற்றியையடுத்து 6வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி தடாலடியாக 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

India remain top of World Test Championship table

இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முந்துவதற்கு இன்னும் கூடுதலாக 64 புள்ளிகளே அதிகமாக தேவைப்படுகிறது.

இந்தியா -நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்துள்ள போதிலும், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 360 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறது. சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளுடன் 7 போட்டிகளில் மோதிய இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்று 360 புள்ளிகளை பெற்றது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் துவக்கத்திலிருந்தே ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த இந்திய அணிக்கு, தற்போது நியூசிலாந்து மண்ணில் மரண அடி கிடைத்துள்ளது. ரசிகர்கள், விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை இந்தியாவின் தோல்விக்கு காரணமாக கூறிவருகின்றனர்.

சாக்குபோக்கே சொல்ல முடியாது... பேட்ஸ்மேன்கள் சிறப்பா விளையாடல... கோலி விளக்கம்சாக்குபோக்கே சொல்ல முடியாது... பேட்ஸ்மேன்கள் சிறப்பா விளையாடல... கோலி விளக்கம்

இதனிடையே இந்தியாவுடன் பெற்ற இரண்டு போட்டிகளின் வெற்றி காரணமாக நியூசிலாந்து அணி கூடுதலாக 120 புள்ளிகளை பெற்று மொத்தம் 180 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு தாவியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் உள்ளிட்டவற்றில் ஒயிட்வாஷ் ஆகி 60 புள்ளிகள் மட்டுமே பெற்று இலங்கைக்கும் கீழே இருந்தது நியூசிலாந்து. தற்போது இந்தியாவுடனான வெற்றி இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணியை முந்துவதற்கு அந்த அணிக்கு உதவியாக இருந்துள்ளது.

இந்தியாவுடனான தொடருக்கு முன்னதாக 60 புள்ளிகளுடன் நியூசிலாந்து 6வது இடத்தில் இருந்தது. நியூசிலாந்துடன் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தனது புள்ளிகளை இந்தியா உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மோசமான தோல்வியை இந்தியா சந்தித்துள்ளது. ஆயினும் தன்னுடைய முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணி இந்தியாவை முந்த 64 புள்ளிகளே தேவைப்படுவதால் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இந்த பட்டியலில் 146 புள்ளிகளுடன் இங்கிலாந்து 4வது இடத்திலும் 140 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 5வது இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் உள்ளன. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகள் புள்ளிகள் எதுவும் பெறாமல் இறுதி இடங்களில் உள்ளன.

Story first published: Monday, March 2, 2020, 16:29 [IST]
Other articles published on Mar 2, 2020
English summary
New Zealand jumped to third spot in the World Test Championship
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X