Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலும் அதே வீரர்களுடன் களமிறங்குகிறது இந்தியா! ரெய்னாவுக்கு சான்ஸ் இல்லை

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 போட்டிகளிலும் பங்கேற்கும் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

முதல் 3 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. வரும் புதன்கிழமை, ராஞ்சியில் 4வது ஒருநாள் போட்டியும், சனிக்கிழமை, விசாகபட்டிணத்தில் கடைசி ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற அதே 14 பேர் கொண்ட குழுவில் எந்த மாற்றமும் செய்யவில்லை பிசிசிஐ. அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் முதல் மூன்று போட்டிகளையும் காய்ச்சலால் மிஸ் செய்திருந்தார். அஸ்வினுக்கு தொடர்ந்து ஓய்வு தரப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்: டோணி (கேப்டன்&விக்கெட் கீப்பர்), விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மா, ரஹானே, மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், ஜெயந்த் ஜாதவ், அமித் மிஷ்ரா, ஜஸ்ப்ரிட் பும்ரா, தவல் குல்கர்ணி, உமேஷ் யாதவ், மன்தீப் சிங், கேதர் ஜாதவ்.

Story first published: Monday, October 24, 2016, 16:32 [IST]
Other articles published on Oct 24, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+