Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அசத்திய டீமில் மாற்றமில்லை.. அதே ஆட்களோடு கடைசி 2 டெஸ்ட்டில் களமிறங்குகிறது இந்திய அணி

மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரர்கள் அப்படியே களமிறங்குகின்றனர். அணியில் கூடுதலாக, குர்கீரத் மன் மட்டும் 17வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது.

India retains 17-man squad for remaining two Test matches against South Africa

இந்நிலையில், எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடந்தது. தேர்வு முடிவில், அணியில் மாற்றம் வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. கூடுதலாக குர்கீரத் மன் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே, ரோகித் ஷர்மா, சாஹா, அஸ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா, புவனேஸ்வர்குமார், உமேஷ் யாதவ், பின்னி, லோகேஷ் ராகுல், குர்கீரத் மன்.

Story first published: Wednesday, November 18, 2015, 15:25 [IST]
Other articles published on Nov 18, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+