For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டர்பன் முதல் ஒருநாள் போட்டி.. இந்தியாவுக்கு தெ.ஆ. 270 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

By Shyamsundar

டர்பன்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

India's 1st one day against SA

இந்தியா தென்னாப்பிரிக்காவிற்கு கிரிக்கெட் விளையாட சென்று இருக்கிறது. 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடர் ஆகும் இது.

இதில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என இழந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.

தற்போது முதல் ஒருநாள் போட்டி டர்பனில் நடக்கிறது. காயம் காரணமாக தென்னாபிரிக்க அணியில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் விலகி இருக்கிறார்.

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கோஹ்லி, ரஹானே, டோணி, கேதார் ஜாதவ், பாண்டியா, புவனேஷ்வர்குமார் , குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல் ஆகியோர் இந்திய அணியில்

டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க அணியின் சார்பிர் டூ பிளெஸ்ஸிஸ் 120 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் சார்பில் குல்தீப் யாதவ் 3, சஹால் 2, ஜாஸ்ரிட் பும்ரா 1 புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

Story first published: Thursday, February 1, 2018, 21:56 [IST]
Other articles published on Feb 1, 2018
English summary
India's plays Ist one day match against SA in Kingsmead, Durban. SA won the toss and chosses to bat. India has Rohit Sharma, Shikhar Dhawan, Virat Kohli (c), Ajinkya Rahane, MS Dhoni (wk), Kedar Jadhav, Hardik Pandya, Bhuvneshwar Kumar, Kuldeep Yadav, Jasprit Bumrah, Yuzvendra Chahal in the playing squad.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+