Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுலிங்கில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. இந்தியா மோசமான தொடக்கம்.. முதல் நாள் என்ன நடந்தது!

கேப் டவுன்: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டி கேப்டவுனில் இருக்கும் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

இந்த வருடத்தின் முதல் கிரிக்கெட் தொடரான இது இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பேச்சிலராக சென்ற கோஹ்லி பேமிலி மேனாக அணிக்கு திரும்பி வந்துவிட்டார். மீண்டும் கேப்டனாக அணியை வழிநடத்த தொடங்கி இருக்கிறார்.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றது.கேப் டவுனில் நடக்கும் போட்டியில் தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. அதன் பின் விளையாடிய இந்தியாவும் மோசமாக தொடங்கி இருக்கிறது.

மோசமான வரலாறு

மோசமான வரலாறு

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருக்கும் கரும்புள்ளி தென்னாப்பிரிக்க அணி மட்டும்தான். ரெயின்போ தேசத்தில் இந்திய அணி ஒரு முறை கூட வண்ணமயமாக விளையாடியது இல்லை. 25 வருடத்தில் ஒருமுறை கூட இந்தியா தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் தொடரை வென்றது இல்லை. இன்று நடக்கும் போட்டிதான் இதற்கு முடிவாக அமையும்.

 பச்சை நிறமே பச்சை நிறமே

பச்சை நிறமே பச்சை நிறமே

கேப்டவுனில் இருக்கும் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. ஆனால் தற்போது இந்த பிட்ச் நன்றாக உலர்த்தப்பட்டு தயாராகி இருக்கிறது. தற்போது முழுக்க முழுக்க பச்சை நிறத்தில் பவுலிங் பிட்சாக மாற்றப்பட்டு இருப்பதால் இந்திய பவுலர்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஏற்கனவே ஸ்டெய்னை சமாளிக்க பாகுபலி - காலகேய போர் போல பல வியூகங்கள் வகுத்து உள்ளனர்.

 பவுலிங்

பவுலிங்

கேப் டவுனில் நடக்கும் போட்டியில் தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்கிறது. தொடக்கத்திலேயே தென்னாப்பிரிக்க அணி திணற தொடங்கி இருக்கிறது. இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. மிகவும் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட் எடுத்தார். இவரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பி சென்றார்கள். அஸ்வின் இரண்டு விக்கெட் எடுத்தார்.

 முதல்நாள் முடிவு

முதல்நாள் முடிவு

ஓப்பனிங் பேட்ஸ்மேன் டியான் எல்கர் புவனேஷ்வர்குமார் பந்தில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் அவர்கள் எதிர்பாத்த அளவிற்கு இல்லை. ஏ பி டிவில்லியர்ஸ் மட்டும் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய் இந்தியா தொடக்கதிலேயே திணறியது. முதல்நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Friday, January 5, 2018, 21:46 [IST]
Other articles published on Jan 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+