இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் வென்றது இந்தியா!
கொழும்பு: இலங்கைக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா.
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன.
4 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வென்றது. ஞாயிறன்று 5-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வெல்ல 239 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

ரோகித் சர்மா- ரஹானே
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் ரஹானேவும் களமிறங்கினர். ஆனால் இருவரும் நிலைக்கவில்லை. அடுத்தடுத்து அவுட் ஆகிவிட்டனர்.

கோஹ்லி- மணீஷ் பாண்டே
பின்னர் இணைந்த கோஹ்லி- மணீஷ் பாண்டே ஜோடி நிதானமாக விளையாடியது. மணீஷ் பாண்டே 36 ரன்களில் அவுட் ஆகினார்.

அசத்திய கோஹ்லி- ஜாதவ்
இதையடுத்து கோஹ்லியுடன் கை கோர்த்தார் ஜாதவ். இந்த ஜோடி ரன்குவிப்பில் விறுவிறுப்பை காட்டியது. இந்த ஜோடியை இலங்கை வீரர்களால் பிரிக்க முடியவில்லை.

கோஹ்லி சதம்
ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி 30-வது சதத்தையும் எட்டினார். 63 ரன்கள் எடுத்த நிலையில் ஜாதவ் அவுட் ஆனார். பின்னர் கோஹ்லியுடன் டோணி இணைந்தார். கோஹ்லி 110 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி வென்றது.

தொடரை கைப்பற்றியது
இந்த வெற்றி மூலம் 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியே வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளிடையே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் கொழும்பில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications