Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவு.. முக்கிய ஆல்ரவுண்டருக்கு காயம்.. உறுதி செய்த ரோகித்

ஐதராபாத் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் சமநிலையை ஆட்டம் காண வைக்கும் வீரருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டி20 போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதற்காக வீரர்கள் பயிற்சி செய்து வந்தனர்.

காயம்

காயம்

இந்த நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் தீபக் ஹூடாவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அதிரடி பேட்ஸ்மேனாக கருதப்படும் தீபக் ஹுடாவுக்கு, சுழற்பந்தவீச்சும் வீச தெரியும். சொல்லப் போனால், தற்போது அணியில் இருக்கும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனில் இவருக்கு மட்டும் தான் சுழற்பந்துவீச தெரியும்.

ஆல்ரவுண்டர்

ஆல்ரவுண்டர்

இதனால், தீபக் ஹூடாவை, ரிஷப் பண்ட்க்கு பதிலாக சேர்த்தால், இந்தியாவுக்கு ஒரு பந்துவீச்சாளரும், ஒரு பேட்ஸ்மேனும் கூடுதலாக கிடைக்கும் என்று அனைவரும் கருதினர். ஜடேஜா இல்லாத நிலையில், தீபக் ஹூடா இந்திய அணிக்கு நல்ல ஆல்ரவுண்டராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

6 மாதத்தில் அசத்தல்

6 மாதத்தில் அசத்தல்

அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சதம், இங்கிலாந்துக்கு எதிராக அதிரடி ஆட்டம், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கட்டுக்கோப்பான பந்துவீச்சு என அனைவரின் நம்பிக்கையும் தீபக் ஹுடா பெற்றார். இதனால் இந்திய அணியில் அறிமுகமாகிய 6 மாதத்தில் டி20 உலககோப்பை அணியில் இடம் பிடித்தார்.

மாற்று வீரர் யார்?

மாற்று வீரர் யார்?

தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தான், ஆஸ்திரேலிய தொடரில் தீபக்ஹூடாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனையடுத்து, டி20 உலககோப்பைக்கு முன் உடல் தகுதியை எட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். தீபக் ஹூடா வெளியேறினால், ரிசர்வ் வீரர்கள் மெயின் அணிக்கு கொண்டு வரப்படுவார்.

Story first published: Sunday, September 25, 2022, 20:05 [IST]
Other articles published on Sep 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+