அவரு யாரு..! எப்பேர்ப்பட்ட பவுலரு..! அவரை போயி இப்படி பண்ணிட்டீங்களே..! முன்னாள் கேப்டன் புலம்பல்
Recommended Video
மும்பை: இந்தியாவின் பெஸ்ட் ஸ்பின்னர் என்றால் அது அஸ்வின் தான், ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறிஇருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்.. ஒரு காலத்தில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர். இப்போது அப்படி தான் சொல்ல வேண்டும். ஐபிஎல் தொடரில் அவரது நிலைமை சற்றே ஆட்டம் காணப்பட்ட நிலையில் இருக்கிறது.
ஏற்கனவே, இந்திய தேர்வாளர்கள் டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓரம் கட்டிவிட்டனர். வெறும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணியில் சேர்க்கப்படுகிறார். இம்முறை வெஸ்ட் இண்டீசில் 2 போட்டிகளிலும் அவர் சேர்க்கப்படவில்லை.

முக்கிய ரெக்கார்டு
இத்தனைக்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பல முக்கிய ரெக்கார்டுகளை வைத்திருக்கிறார். ஆனாலும் பலன் இல்லை. அவருக்கு பதிலாக, ரவீந்திர ஜடேஜா மட்டுமே ஆடினார். ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் சிறப்பான பீல்டிங் காரணமாகவே அவருக்கு அந்த ஸ்பின்னர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இது தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொன்னதாகும்.

சிறந்த ஸ்பின்னர்
இந்நிலையில் ரவிசந்திரன் அஸ்வின் பற்றி முன்னாள் வீரர் மற்றும் கேப்டன் அனில் கும்ப்ளே பாராட்டி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: இன்றைய தேதிக்கு உள்ள ஸ்பின்னர்களில் சிறந்தவர் அஸ்வின் தான்.

வழி கண்டுபிடிக்க வேண்டும்
சில நேரங்களில் காயத்தால், முழுமையான திறனை பயன்படுத்தி அவரால் விளையாட முடியாமல் போனது. ஆனாலும், அணியின் நம்பர் 1 ஸ்பின் என்றால் அவர் தான். ஆடும் லெவனில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கான வழி தான் கண்டுபிடிக்க வேண்டும்.

4 சதம்
என்னை பொறுத்தவரை இரண்டு ஸ்பின்னர்களுக்கு டீம்மில் கட்டாயம் இடம் உண்டு. ஒருவர் ஜடேஜா மற்றும் அஸ்வின். ஏன் என்றால் பவுலிங்கில் மட்டுமல்ல.. இருவரும் சிறந்த பேட்ஸ்மேன் தான். அஸ்வின் வசம் நான்கு சதம் உள்ளது.

பெரிய சவால்
ஜடேஜாவும் தற்பொழுது பேட்டிங்கில் கலக்கி வருகிறார். வெஸ்ட் இண்டீசில் அதை மீண்டும் நிரூபித்தார். இந்த இருவரும் இணைந்து எதிர் அணிக்கு பெரிய சவாலாக இருப்பர். வெளிநாட்டு தொடர்களில் எப்பொழுதும் 4 பவுலர்களை வைத்து கொண்டு விக்கெட்டுகளை சாய்க்க முடியாது.

ஏற்க முடிஏற்க முடியவில்லை யவில்லை
3 வேகப்பந்துவீச்சாளர், 2 ஸ்பின்னர்கள் வேண்டும். அதிலும் அந்த ஸ்பின்னர்கள் பேட்டிங்கில் கலக்க வேண்டும். அஸ்வின் மீண்டும் 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார். அவரை போன்ற ஒரு வீரர் வெளியே உட்கார வைக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications