Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் இப்படி ஒரு வெற்றி.. கோஹ்லி பாய்ஸ் படைத்த சாதனை!

நாக்பூர்: விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் இன்று புதிதாக ஒரு முத்திரையை பதித்துள்ளது. நாக்பூரில் இலங்கை அணியை இந்தியா, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், ஒரு வரலாற்று சாதனையை சமன் செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட், மழை உதவியால் டிராவான நிலையில், நாக்பூரில் 2வது டெஸ்ட் நடைபெற்றது.

டாஸ் வென்று பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 205 ரன்களும், இந்தியா 610 ரன்களும் எடுத்தன. இந்தியாவிடம் 4 விக்கெட்டுகள் கைவசம் இருந்தபோதிலும், டிக்ளேர் செய்திருந்தது. இந்தியா, 405 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 2வது இன்னிங்சில் இலங்கை நேற்று மாலை பேட்டிங்கை ஆரம்பித்தது.

சரணடைந்த இலங்கை

சரணடைந்த இலங்கை

இன்று ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி 166 ரன்களுக்கே ஆல்அவுட்டானது. அஸ்வின் 4, இஷாந்த் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா மர்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ஒரு சாதனையாகும்.

வங்கதேசத்திற்கு எதிரான சாதனை சமன்

வங்கதேசத்திற்கு எதிரான சாதனை சமன்

2007ல் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, வங்கதேசத்தை 1 இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இதுவரை இந்திய அணியின் இமாலய வெற்றி சாதனையாக இருந்தது. இன்று அந்த சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஒரு ரன் குறைவாக எடுத்திருந்தாலும், இந்தியா புது சாதனையை உருவாக்கியிருக்கும்.

ஆஸ்திரேலியாவும் தப்பவில்லை

ஆஸ்திரேலியாவும் தப்பவில்லை

இதற்கு அடுத்த இமாலய வெற்றியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் பதிவு செய்திருந்தது இந்திய அணி. 1998ல் இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 2010ல் இதே நாக்பூரில் நியூசிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 198 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்துள்ளது.

அடி வாங்கும் இலங்கை

அடி வாங்கும் இலங்கை

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம், பல்லெகேலேயில் நடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கையை இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இலங்கைக்கு எதிரான இந்தியாவின் பெருவெற்றியாக இருந்து வந்தது. அதற்கு முன்பாக 2009ல் கான்பூரில் இலங்கையே இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியிருந்தது.

Story first published: Monday, November 27, 2017, 15:52 [IST]
Other articles published on Nov 27, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+