இந்த விஷயத்தில் அவர் தான் கிங்… ஸ்டைலே தனி தான்.. ஒரு பவுலரை பாராட்டும் இந்திய கோச்..!
Recommended Video
மும்பை: மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப மாற்றி, துல்லியமாக பந்து வீசுவதால் தான் பும்ரா விக்கெட்டுகளை அள்ள காரணம் என்று பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் பாராட்டி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளரான பும்ரா, மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஐசிசி டெஸ்ட் போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா முதல்முறையாக பத்து இடங்களுக்குள் டாப் 10ல் நுழைந்துள்ளார். மொத்தம் 774 புள்ளிகளுடன் அவர் தற்போது ஏழாம் இடத்தில் உள்ளார். இதற்கு முன்னதாக அவர் 16ம் இடத்தில் இருந்தார்.

பயிற்சியாளர் பாராட்டு
இந் நிலையில் பும்ராவின் பவுலிங், அவரது செயல்பாடுகளுக்கு பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: பும்ரா தற்போது சிறப்பாக பந்து வீசுகிறார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் அவர் சூழ்நிலையை புரிந்துகொண்டு, லென்த்தை மாற்றி வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

5 விக். அசத்தல்
2வது இன்னிங்ஸ் செல்லும்முன் நான் அவருடைய லென்த்தை கரெக்டாக பின்பற்றி வருகிறீர்கள் அதை மாற்றாமல் வீசுங்கள் என்று கூறினேன். அவரும் சிறப்பாக வீசி, 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மாற்றம் வேண்டாம்
பும்ரா ஒரு திறமையான பந்துவீச்சாளர். சூழ்நிலைகளுக்கேற்ப, மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப பவுலிங்கை மாற்றிக்கொள்கிறார். இந்த மாற்றம் தான் அவருக்கு விக்கெட்களை அள்ளி தருகிறது. வேற எந்த மாற்றமும் அவர் பந்து வீச்சில் மாற்றம் செய்ய தேவையில்லை.

வித்தியாசமான ஸ்டைல்
மேலும் 140 கிலோ மீட்டருக்கு மேல் அவரால் தொடர்ந்து பந்துவீச முடிகிறது. எனவே அவருடைய வேகம் மற்றும் துல்லியம் அவருக்கு தொடர்ந்து விக்கெட்டுகளை தருகிறது. ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் ஒரு வித்தியாசம் இருக்கும். பும்ராவின் ஸ்டைலே ஒரு வித்தியாசம்தான். கிரிக்கெட்டில் அவர் நிறைய சாதிப்பார் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications