For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கையை 3 முறை புரட்டி எடுத்து கோப்பையை வென்ற இந்தியா.. ஆசிய கோப்பை வரலாறு

மும்பை : இந்தியா ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை ஆறு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதிக முறை ஆசிய கோப்பை கைப்பற்றிய நாடு என்ற பெருமையும் பெற்றுள்ளது.

இது வரை நடந்துள்ள 13 ஆசிய கோப்பை தொடர்களில் எட்டு முறை இறுதிப் போட்டி வரை சென்றுள்ளது இந்தியா. அதில் ஆறு முறை வெற்றியும் பெற்றுள்ளது.

கடந்த ஆசிய கோப்பையை வென்ற நாடும் இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஆசிய கோப்பையில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய நாடு. அதில் முக்கியமான மூன்று போட்டிகள் பற்றி இன்று பார்க்கலாம்.

இலங்கையை புரட்டி எடுத்த இந்தியா

இலங்கையை புரட்டி எடுத்த இந்தியா

இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இலங்கை உள்ளது. அந்த நாடு இதுவரை ஐந்து முறை ஆசிய கோப்பை வென்றுள்ளது. அந்த இலங்கையை 80 மற்றும் 90களில் மூன்று முறை இறுதிப் போட்டிகளில் இந்தியா புரட்டி எடுத்து, ஆசிய கோப்பையை தட்டிச் சென்றது.

1988 வில்ஸ் ஆசிய கோப்பை இறுதி

1988 வில்ஸ் ஆசிய கோப்பை இறுதி

1988இல் நடந்த ஆசிய கோப்பை இறுதியில் இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. 176 ரன்களுக்கு சுருண்டது அந்த அணி. அதில் நான்கு பேர் ரன் அவுட் ஆனார்கள். அதை தவிர்த்து அன்று பகுதி நேர பந்துவீச்சாளராக வந்த ஸ்ரீகாந்த் அசத்தலாக 3 விக்கெட்கள் எடுத்தார். அடுத்து ஆடிய இந்திய அணியில் நவ்ஜோத்சிங் சித்து 76 ரன்கள் எடுத்தார். வெங்க்சர்க்கார் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுக்க இந்தியா எளிதாக வென்றது.

1990-91 ஆசிய கோப்பை இறுதி

1990-91 ஆசிய கோப்பை இறுதி

1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதியில் இந்தியா, இலங்கை மோதின. இந்த போட்டியிலும் முதலில் இலங்கை ஆடியது. நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்களில் இலங்கை அணி 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. அன்றைக்கு இளம் வீரரான ஜெயசூர்யா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய இந்தியாவில், மஞ்ச்ரேக்கர் 75, இளம் சச்சின் 53, அசாருதீன் 54 ரன்கள் குவிக்க இந்தியா 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது.

1995 பெப்சி ஆசிய கோப்பை இறுதி

1995 பெப்சி ஆசிய கோப்பை இறுதி

இந்த இறுதியிலும், இலங்கை அணி தான் முதலில் பேட் செய்தது. அந்த அணியின் குருசின்ஹா 85 ரன்கள் அடித்தார். மற்றவர்கள், சொற்ப ரன்கள் மட்டுமே அடித்தனர். அந்த 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்திய அணியில் சச்சின் துவக்க ஆட்டக்காரராக ஆடி, 41 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சித்து 84, அசாருதீன் 90 ரன்கள் குவிக்க இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, September 11, 2018, 18:01 [IST]
Other articles published on Sep 11, 2018
English summary
India’s dominance in the 1989-95 in asia cup, during the period India won three asia cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+