Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2015ல் இந்திய கிரிக்கெட்... சந்தோஷம் மட்டும் இல்லைங்க.. பல சங்கடங்களும் வந்தது!

சென்னை: 2015ம் ஆண்டில் இந்தியாவுக்கு சந்தோஷம் தந்த நிகழ்வுகள் எந்த அளவுக்கு இருந்ததோ அதே அளவுக்கு பல சங்கடங்களும் வரத் தவறவில்லை.

முக்கியமாக ஒரு நாள் போட்டிகளில் இந்தியா பெரும் சரிவையே கண்டுள்ளது இந்த ஆண்டில். உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் அடுத்தடுத்து வென்று வந்த இந்தியா அரை இறுதியில் பரிதாபகரமாக தோற்றது.

இந்தத் தோல்விகள் இந்திய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பல வீரர்கள், இந்திய ரசிகர்களின் கண்டனத்துக்கும் ஆளானார்கள்.

ஒரு தொடரையும் வெல்லவில்லை

ஒரு தொடரையும் வெல்லவில்லை

இந்திய அணி இந்த ஆண்டு ஒரு, ஒரு நாள் தொடரையும் வெல்ல முடியாமல் போனது. உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு முன்பாக நடந்த முத்தரப்புப் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் மாறி மாறி தோல்வியைச் சந்தித்தது. அதன் பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான தொடரை 1-2 என்ற கணக்கிலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-3 என்ற கணக்கிலும் இழந்தது.

வங்கதேசத்திடம் கேவலமான தோல்வி

வங்கதேசத்திடம் கேவலமான தோல்வி

உலகக் கோப்பைப் போட்டியை முடித்து விட்டுத் திரும்பியதும் வங்கதேசத்திற்குச் சென்றது இந்தியா. அங்கு நடந்த ஒரு நாள் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. முதல் இரு போட்டிகளில் தோற்று 3வது போட்டியில் மட்டுமே இந்தியா வென்றது.

ஆஸ்திரேலியாவிடம் கேவலமான அடி

ஆஸ்திரேலியாவிடம் கேவலமான அடி

உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டிக்கு முன்பு வரை இந்தியாதான் கோப்பையை வெல்லும் என்று அத்தனை பேரும் கூறி வந்தனர். ஆனால் அரை இறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் பயங்கரமாக அடி வாங்கி பரிதாபமாக தோற்றுப் போனது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 46.5 ஓவர்களிலேயே 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிப் போனது.

கோஹ்லியின் மோசமான ஃபார்ம்

கோஹ்லியின் மோசமான ஃபார்ம்

விராத் கோஹ்லி ஒரு நாள் போட்டியில் மொத்தமாக சொதப்பிய ஆண்டு இது. இந்த வருடம் முழுவதும் அவர் சாதிக்கவே இல்லை என்று கூறலாம். உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 107 மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் போட்ட 138 ஆகியவற்றைத் தவிர மற்ற போட்டிகளில் அவர் சோபிக்கவில்லை. இந்த வருடம் அவர் ஆடிய 20 போட்டிகளிலிலிருந்து அவர் 623 ரன்களையே எடுத்துள்ளார். சராசரி 36.65 ஆகும்.

தென் ஆப்பிரிக்காவிடம் பலத்த அடி

தென் ஆப்பிரிக்காவிடம் பலத்த அடி

வங்கதேசத்திற்குப் போய் அடி வாங்கிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை இங்கு வரவழைத்து அதனிடம் பலத்த அடியை வாங்கிக் கட்டிக் கொகண்டது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-3 என்ற கணக்கில் இந்தியா தொடரை இழந்தது. அஸ்வின் இல்லாமல் போனது இந்தியாவுக்குப் பாதகமாக மாறிப் போய் விட்டது.

சொதப்பிய தவான்

சொதப்பிய தவான்

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இந்த வருடம் எல்லா வகைப் போட்டிகளிலும் சொதப்பினார். டுவென்டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் சோபிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கத் தொடரின்போது அவர் சரிவர ஆடவில்லை. தவானின் ஆட்டம், இந்திய ரசிகர்களுக்கு இந்த வருடம் ஏமாற்றம்தான்.

டுவென்டி 20 தோல்வி

டுவென்டி 20 தோல்வி

தென் ஆப்பிரிக்காவுடனான டுவென்டி 20 தொடரை இந்தியா கேவலமாக இழந்தது ரசிகர்களை அதிர வைத்தது. 2-0 என்ற கணக்கில் டுவென்டி 20 தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது. இந்தியாவால் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் போனது ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது.

டெஸ்ட்டில் பேட்டிங் சரியில்லை

டெஸ்ட்டில் பேட்டிங் சரியில்லை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றாலும் கூட பேட்டிங் சொதப்பியதை யாரும் மறக்க முடியாது. 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஒரு இன்னிங்ஸில் கூட இந்தியா 400 ரன்களைத் தொடவில்லை. ஆறு இன்னிங்ஸ்களில் இந்தியா எடுத்த ஸ்கோர் - 201, 200, 215, 173, 334, 267. அஜிங்கியா ரஹானே அடுத்தடுத்து 2 செஞ்சுரி போட்டது மட்டுமே ஆறுதல். அஸ்வின் புண்ணியத்தால் இந்தத் தொடரை வென்றது இந்தியா என்பது குறிப்பிடத்தகக்து.

Story first published: Wednesday, December 23, 2015, 10:09 [IST]
Other articles published on Dec 23, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+