Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"லைவ்" கிரிக்கெட்.. ஸ்டேடியத்துக்குள் புகுந்த பெண்.. நச்சுன்னு "13 முத்தம்".. இந்திய வீரர் "ஷாக்"

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில், ஒரு லைவ் மேட்சில் பெண்ணிடம் முத்தம் வாங்கிய முதல் வீரர் யார் தெரியுமா? உண்மையில் சர்பிரைஸ் தான்.

இந்தியாவில் சினிமா, கிரிக்கெட் ஆகியவற்றுக்கு ஈடு இணை எதுவுமில்லை. மதங்கள் கூட அப்பாற்பட்டது தான். ஜாதி, மதம், இனம் எல்லாம் மறந்து அனைவரும் ஒரே மைதானத்தில் திரண்டு எழுப்பும் கோஷம், இந்தியா.. இந்தியா.." என்பது தான்.

அப்படிப்பட்ட சக்திவாய்ந்த கிரிக்கெட்டை விளையாடும் வீரர்களுக்கு இருக்கும் மவுஸை பற்றி புதிதாக சொல்ல வேண்டுமா என்ன?

தேவ தூதர்கள் போல

தேவ தூதர்கள் போல

கவாஸ்கர் தொடங்கி இன்று பாண்ட்யா வரை ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களையும் ஆராதிக்கின்றனர் ரசிகர்கள். ஏதோ தெய்வம் போல, தேவ தூதர் போல பாவிக்கின்றனர். அவர்கள் செல்லும் இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்று ஃபோட்டோ எடுக்க அலை மோதுகின்றனர். இதனால் தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இவ்வளவு கிராக்கி. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. ஏதாவது ஒரு மேட்ச் க்ளிக் ஆகிவிட்டால் போதும்.. அப்புறம் ஸ்டார் தான். சர்வசாதாரணமாக, 5 ஆண்டுகளில் 50 கோடி சம்பாதித்துவிடுவார்கள்.

வெறித்தன ரசிகை

வெறித்தன ரசிகை

சச்சின், தோனி, கோலி என்று சூப்பர் ஸ்டார்களும் இந்திய அணியில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அதற்கும் அப்பாற்பட்டவர்கள். கிட்டத்தட்ட கடவுளுக்கு இணை. தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் ரசிகர்கள். பைத்தியக்காரத்தனத்தின் உச்சக்கட்டத்திற்கு கூட செல்வார்கள். ஆனால், இவையெல்லாம் அன்பின்பால் ரசிகர்கள் செய்வது தான். அப்படி ஒரு ரசிகை இங்கு ஒரு வீரருக்கு முத்தமே கொடுத்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அப்பாஸ் அலி

அப்பாஸ் அலி

ஆம்! இந்திய அணியில் ஒரு காலத்தில் மோஸ்ட் ஹேண்ட்ஸம் வீரராக இருந்தவர் அப்பாஸ் அலி. இவருக்கு இந்திய அணியில் 'Glamour Boy' என்ற பெயரே இருந்தது. இப்போது வரையில் கூட இந்தியாவின் ஹேண்ட்ஸம் கிரிக்கெட்டர் வரிசையில் அப்பாஸ் தான் டாப். அவர் மீது இளம் பெண்கள் அவ்வளவு காதலுடன் இருந்தனர். அவர் எங்கு சென்றாலும், பெண்கள் கூட்டம் அலைமோதும்.

13 முத்தங்கள்

13 முத்தங்கள்

அப்போது 1960ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், அப்பாஸ் அலி பெவிலியன் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக, பெண் ஒருவர் மைதானத்துக்குள் புகுந்து, அப்பாஸ் அலிக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். ஒன்றல்ல.. இரண்டல்ல.. 13 முத்தங்கள். இதனை அங்கு கூடியிருந்த அத்தனை ரசிகர்களும் பார்த்தனர். வீரர்களும் சிரித்துக் கொண்டே பார்த்தனர்.

நச்சுன்னு இச்சு

நச்சுன்னு இச்சு

அப்போது அந்த போட்டியில் வர்ணனை செய்து கொண்டிருந்த விஜய் மெர்ச்சண்ட், "நான் சதம் அடித்த போதும், இரட்டை சதம் அடித்த போதும் இந்த பெண்கள் எங்கு போய்விட்டார்கள்?" என்று கிண்டலாக பேசினார். அந்த போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் 58 ரன்கள் அடித்த அப்பாஸ் அலி, அந்த போட்டியை இந்திய அணி டிரா செய்வதில் முக்கிய பங்காற்றினார்.

Story first published: Wednesday, July 7, 2021, 19:26 [IST]
Other articles published on Jul 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+