Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் முதல் பகலிரவு 4 நாள் போட்டிக்கு வருண பகவான் கட்டையைக் கொடுப்பார் போலயே!

கொல்கத்தா: இந்தியாவில் நடைபெறவுள்ள முதல் பகல் இரவு 4 நாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இந்தியாவின் முதல் பகல் இரவு 4 நாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஜூன் 18ம் தேதி அதாவது நாளை தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஆனால் இந்தப் போட்டிக்கு மழையால் பாதிப்பு வரும் அபாயம் எழுந்துள்ளது. கொல்கத்தாவில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 நாள் மழை பெய்யும்

2 நாள் மழை பெய்யும்

கொல்கத்தாவில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பகலிரவு டெஸ்ட்டுக்கு வெள்ளோட்டம்

பகலிரவு டெஸ்ட்டுக்கு வெள்ளோட்டம்

இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்தியா - நியூசிலாந்து இடையே அக்டோபரில் நடைபெறவுள்ளது. கொல்கத்தாவில்தான் இப்போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3வது போட்டி பகல் இரவுப் போட்டியாக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வெள்ளோட்டமாக நாளை ஒரு நான்கு நாள் போட்டி தொடங்குகிறது.

மோகன்பகான் - போவனிப்பூர்

மோகன்பகான் - போவனிப்பூர்

கிளப் அணிகளான மோகன்பகான் - போவனிப்பூர் இடையே இந்த நான்கு நாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளில் இளஞ்சிவப்பு நிற "கூக்கபுரா" பந்து பயன்படுத்தப்படவுள்ளது.

முதல் முறையாக

முதல் முறையாக

இந்தியாவில் இப்போதுதான் இளஞ்சிவப்பு நிற கூக்கபுரா பந்து பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கு முன்பு இந்தப் பந்தைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே பகலிரவுப் போட்டி நடைபெற்றது. அப்போது இந்தப் பந்து குறித்து இரு அணிகளுமே அதிருப்தி தெரிவித்திருந்தன. எனவே இந்தியாவில் இந்தப் பந்துக்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மழை பாதிப்பு வருமா

மழை பாதிப்பு வருமா

ஆனால் நாளை தொடங்கும் போட்டிக்கு மழையால் பாதிப்பு வருமா என்ற கவலை பெங்கால் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு குறிப்பாக அதன் தலைவர் சவுரவ் கங்குலிக்கு வந்துள்ளது. காரணம், வானிலை மையத்தின் மழை எச்சரிக்கையால்.

வந்தாலும் பிரச்சினை இல்லை?

வந்தாலும் பிரச்சினை இல்லை?

ஆனால் மழை வந்தாலும் கூட உடனடியாக மைதானத்தை மூடுவதற்கான அனைத்து வசதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே போட்டி பெரிய அளவில் பாதிக்கப்படாது என்றும் நம்பப்படுகிறது.

Story first published: Friday, June 17, 2016, 13:37 [IST]
Other articles published on Jun 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+