பிற அணிகளுக்கு மிரட்டல் தரும் டோணி அன் கோவின் "மரண கானா"... ஆர்.பி. சிங்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஃபார்ம் பிற அணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உள்ளது என்று கிரிக்கெட் வீரர் ஆர்.பி. சிங் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை போட்டிகள் துவங்கும் முன்பு வரை விமர்சனத்திற்குள்ளான இந்திய அணியின் தற்போதைய ஃபார்ம் அனைவரையும் மிரள வைத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து கிரிக்கெட் வீரர் ஆர்.பி. சிங் கூறுகையில்,

இந்திய அணி
இந்திய அணி இதுவரை தன்னுடன் மோதிய அனைத்து அணிகளையும் தோற்கடித்துள்ளது. இளம் இந்திய அணியை பார்த்து பிற அணிகள் எச்சரிக்கையுடன் இருக்கும். இந்திய அணியின் ஃபார்ம் பிற அணிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக உள்ளது.

பந்துவீச்சாளர்கள்
அமீரகத்திற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ஸ்விங் பவுலிங்கை பார்த்து அசந்துவிட்டேன்.

உமேஷ் யாதவ்
உமேஷ் யாதவ் அருமையாக விளையாடினார். அவர் பந்துவீச்சை பார்த்து அமீரக பேட்ஸ்மேன்கள் அதிர்ந்துவிட்டனர்.

புவனேஸ்வர் குமார்
முகமது ஷமிக்கு பதில் விளையாடிய புவனேஸ்வர் குமார் சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் என்றார் ஆர்.பி. சிங்.

மேற்கிந்திய தீவுகள்
டோணி தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக கிறிஸ் கெய்ல் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதுகிறது.


Click it and Unblock the Notifications