Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் பெண் மேட்ச் ரெப்ரீ.. கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஜிஎஸ் லக்ஷ்மி!

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்-இன் மேட்ச் ரெப்ரீ குழுவில் இணைந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியாவின் ஜிஎஸ் லக்ஷ்மி.

இதன் மூலம், லக்ஷ்மி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மேட்ச் ரெப்ரீயாக இருக்கும் தகுதியை பெற்றுள்ளார். விரைவில் அவர் ஆடவர், மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மேட்ச் ரெப்ரீயாக பார்க்கலாம்.

India’s GS Lakhsmi becomes first woman to be inducted into ICC match referee panel

இந்திய பெண் ஒருவர், ஆண்கள் மட்டுமே இடம் பெற்று இருக்கும் ஐசிசி மேட்ச் ரெப்ரீ குழுவில் இணைந்து இருப்பது நாட்டுக்கே பெருமை தரும் செய்தியாக அமைந்துள்ளது.

ஜிஎஸ் லக்ஷ்மி அவர்களுக்கு 51 வயது ஆகிறது. 2008-09 காலகட்டத்தில் மூன்று உள்ளூர் மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கும், மூன்று உள்ளூர் மகளிர் டி20 போட்டிகளுக்கும் மேட்ச் ரெப்ரீயாக செயல்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்கள் முன்பு ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு அம்பயராக செயல்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்று இருந்தார் கிளாரே போலோசாக். அவரைத் தொடர்ந்து முதல் பெண் மேட்ச் ரெப்ரீ என்ற பெருமையை பெற்றுள்ள லக்ஷ்மி ஆடவர் கிரிக்கெட்டுக்கும் சேர்த்தே மேட்ச் ரெப்ரீயாக செயல்படவுள்ளார்.

Story first published: Wednesday, May 15, 2019, 10:11 [IST]
Other articles published on May 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+