Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது.. ஈடன்கார்டனில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி!

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை ஒரு நாள் மற்றும் டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளில் 11 முறை மோதி 11 முறையும் இந்தியாவே வென்றுள்ளது. இதில் 7 முறை கேப்டன் டோணி தலைமையில் இந்தியா வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.

India's maiden win in Eden Gardens

அதிக அளவிலான போட்டிகளுக்கு கேப்டனாக இருந்ததன் மூலம் டோணியும் புதிய வரலாறு படைத்துள்ளார். வரலாற்றில் அவருக்கும் இடம் கிடைத்துள்ளது.

முதல் போட்டியில் பெரிய தோல்வியைச் சந்தித்திருந்தாலும் கூட 2வது போட்டியில் கில்லி மாதிரி இந்தியா ஆடி வென்ற விதம் ரசிகர்களைக் குஷிப்படுத்தி விட்டது.

இந்தியாவின் வெற்றி குறித்து வீரேந்திர ஷேவாக் கூறுகையில், இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றி இது. விராத் சிறப்பாக ஆடினார். அநைத்து ரசிகர்களுக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் ஷேவாக்.

ஈடன் கார்டனில் முதல் வெற்றி

ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் வெற்றி இது. இங்கு இதுவரை 4 ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. நான்கிலுமே பாகிஸ்தான்தான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 20, 2016, 10:42 [IST]
Other articles published on Mar 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+