Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிரணிகளே இப்போ வாங்க, இப்போ வாங்க.. இந்தா வந்துட்டாருல்ல 'இந்தியாவின் மலிங்கா'

சென்னை: குஜராத்தை சேர்ந்த 22 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பெயர்தான் உலக கிரிக்கெட் அரங்கில் தற்போது டாக் ஆப் தி டவுன்.

பின்ன என்ன.. கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலிய அணியை, அதன் சொந்த மண்ணிலேயே கண்ணில் விரலை விட்டு ஆட்டும் ஒரு பவுலர் என்றால் சும்மாவா?

வேகப்பந்து வீச்சில் பட்டையை கிளப்பும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களே, பும்ராவை பார்த்தால் பதறுகிறார்கள் என்றால், அவர் கையில் உள்ள வித்தை அப்படிப்பட்டது.

அசால்ட் அட்டாக்

அசால்ட் அட்டாக்

பந்து வீச கற்றுக்கொள்ளும் ஒரு புதுமுக பவுலரை போலத்தான், இருக்கிறது, பும்ராவின் பந்து வீசும் ஸ்டைல். கையை சற்று சரித்தபடி அவர் பந்து போடுவதை முதலில் பார்ப்போர், "இன்னும் தம்பி பந்துபோட கற்றுக்கொள்ளவில்லை போலும்" என்றுதான் நினைப்பார்கள். ஆனால் பேட்ஸ்மேன்களுக்கோ இவர் சிம்ம சொப்பனம்.

ஐபிஎல் ஸ்டார்

ஐபிஎல் ஸ்டார்

சர்வதேச கிரிக்கெட்டுக்கு பும்ரா புதுசாக இருக்கலாம். ஆனால் ஐபிஎல் பார்ப்போருக்கு இவர் அறிமுகமானவர்தான். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, ஆடும் இவருக்கு, சக ஆட்டக்காரர்கள் லசித் மலிங்காவும், ஜாகீர் கானும் ரொம்ப நெருக்கம்.

இந்தியாவின் மலிங்கா

இந்தியாவின் மலிங்கா

இலங்கை வீரரான மலிங்காவின் பவுலிங் ஸ்டைலுடன் பல வகைகளிலும் ஒத்து காணப்படுகிறது பும்ரா பந்து வீச்சு. ஸ்டைல் மட்டுமின்றி, யார்க்கர் மற்றும் ஸ்லோ பால்களை வீசி எதிரணியினரை திணறச் செய்வதிலும், இந்தியாவின் மலிங்காதான் இந்த பும்ரா.

யார்க்கர்

யார்க்கர்

இறுதி கட்ட ஓவர்களில் பேட்ஸ்மேன்களை திணறச் செய்யும் ஆயுதங்களில் முக்கியமானது யார்க்கர். சற்று எக்குத்தப்பாக யார்க்கர் வீசப்பட்டாலும், சிக்சருக்கு விரட்டப்படும் அபாயம் அந்தவகை பந்துகளில் உள்ளது. சரியாக இறக்கப்படும் யார்க்கர்களுக்கோ விக்கெட்டை வீழ்த்தும் சாமர்த்தியமும் உண்டு.

ஸ்பெஷலிஸ்ட்

ஸ்பெஷலிஸ்ட்

மலிங்கா, இதுபோன்ற சிறப்பான யார்க்கர்களை வீசுவதில் ஸ்பெஷலிஸ்ட். பும்ராவின் யார்க்கர்களும் அதே பாணியில் தூள் கிளப்புவதாக கூறுகிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

ஜாகீருக்கு பிறகு பும்ரா

ஜாகீருக்கு பிறகு பும்ரா

பேட்ஸ்மேனின் கால், அல்லது, பேட் அடி விளிம்பிற்கு கீழே பிளாக்-ஹோல் என்று அழைக்கப்படும் பகுதியில் பந்தை சரியாக டெலிவரி செய்யும் யார்க்கர் வீசுவதில் உலக அளவில் வாசிம் அக்ரம், மெக்ராத், ஜாகீர்கான், மலிங்கா பெஸ்ட். அதேபோன்றுதான் அச்சுறுத்தும் யார்க்கர்களை வீசுகிறார் பும்ரா.

மலிங்கா ஸ்டைல்

மலிங்கா ஸ்டைல்

பும்ராவின் பக்கவாட்டு கை ஆக்ஷன், பேட்ஸ்மேன்களை குழப்புவதும் அவரது சக்சசுக்கு காரணம். இதனால்தான், ரன் மழை பெய்துவரும் ஆஸி. பிட்சில் கூட அசால்டாக விக்கெட்டுகளை அள்ளுவதோடு, ரன்களையும் கட்டுப்படுத்துகிறார் பும்ரா.

முதல் போட்டியில் முத்திரை

முதல் போட்டியில் முத்திரை

சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒன்டேயில், சர்வதேச போட்டிகளில் காலடி எடுத்து வைத்தார் பும்ரா. அனுபவசாலி பவுலர்களே ரன்களை அள்ளி வழங்கிய அப்போட்டியில் பும்ரா 10 ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மெருகேறும் பவுலிங்

மெருகேறும் பவுலிங்

அடிலெய்டில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இன்னும் மெருகேறி இருந்தது பும்ரா பந்து. 4 ஓவர்கள் வீசிய (21 பந்துகள்) பும்ரா, 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிகட்ட ஓவர்களில் அவரது பந்து வீச்சு அபாரமாக இருந்தது.

முதலில் இருந்தே அப்படித்தான்

முதலில் இருந்தே அப்படித்தான்

ஆஸ்திரேலிய பிட்சில் மட்டும் சிறப்பாக செயல்படும் பவுலர் பும்ரா அல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது அவர் முதல்தர கிரிக்கெட் வரலாறு. 18 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள பும்ரா, 64 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். எக்கனாமி ரேட் வெறும், 2.72 மட்டுமே.

உள்ளூரிலும் கிங்குதான்

உள்ளூரிலும் கிங்குதான்

லிஸ்ட் ஏ வகை கிரிக்கெட் போட்டிகள் மொத்தம் 21 ஆடியுள்ள பூம்ரா, 41 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். எக்கனாமி ரேட் 4.02. டி20 போட்டிகள் 48. விக்கெட்டுகள் 55. எக்கனாமி ரேட் 7.32.

சக்சஸ் ஹீரோ

சக்சஸ் ஹீரோ

குஜராத், இந்தியா-ஏ, 23 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, மும்பை இந்தியன்ஸ் என பல்வேறு அணிகளுக்காக ஆடி அசத்திய பும்ரா, இந்தியாவிற்கான நம்பிக்கை ஒளிக்கீற்றாக தென்படுகிறார். திறமையை தாண்டி, ஆஸ்திரேலியாவில் இவர் முதல் முறையாக களமிறங்கிய இரு சர்வதேச போட்டிகளிலும் (ஒன்டே மற்றும் டி20) இந்திய அணி வெற்றியை ருசித்துள்ளது, பும்ராவை அதிருஷ்டசாலியாக அடையாளம் காணச் செய்துள்ளது.

Story first published: Wednesday, January 27, 2016, 10:52 [IST]
Other articles published on Jan 27, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+