Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நிலாவுலதான் மிதந்துக்கிட்டு இருக்கேன்... இந்தியாவோட வெற்றி அந்தளவுக்கு சந்தோஷம் கொடுத்துருக்கு!

டெல்லி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் இநதியா வெற்றி கொண்டுள்ளது.

இந்த வரலாற்று வெற்றியை இந்தியா கொண்டாடி வருகிறது. பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இந்த வெற்றி தனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளதாகவும் தான் நிலாவிலும் அதன் சுற்றுவட்ட பாதையிலும் மிதந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வரலாற்று வெற்றி

இந்தியா வரலாற்று வெற்றி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. இந்த இமாலய வெற்றியை கொண்டாடி வருகிறது இந்திய அணி. சர்வதேச அளவில் இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

சுனில் கவாஸ்கர் உற்சாகம்

சுனில் கவாஸ்கர் உற்சாகம்

இந்நிலையில் இந்த தொடரில் வர்ணனை செய்தவர்களுக்கு சேனல் 7 ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பங்கேற்ற முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், நேற்றைய தினம்தான் நாடு திரும்பினார். அப்போது இந்த வெற்றி தன்னை நிலாவிலும் அதன் சுற்றுவட்ட பாதையிலும் மிதந்து கொண்டிருக்க செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்டிப்பிடித்து லாரா வாழ்த்து

கட்டிப்பிடித்து லாரா வாழ்த்து

சேனல் 7னின் விருந்தில் தன்னுடன் கலந்து கொண்ட சக வர்ணனையாளர் பிரையன் லாரா, தன்னை கட்டிப்பிடித்து நாம் வெற்றி அடைந்து விட்டதாக உற்சாகத்துடன் கூறியதாகவும் இந்த தருணத்தை தன்னால் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து தொடரிலும் வர்ணனை

இங்கிலாந்து தொடரிலும் வர்ணனை

இந்தியா -ஆஸ்திரேலிய தொடரில் ஷேன் வார்ன், ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் வாக் உள்ளிட்டவர்களுடன் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்ட முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், தற்போது இங்கிலாந்து -இந்தியா தொடரிலும் தன்னுடைய வர்ணனையை தொடர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 25, 2021, 11:19 [IST]
Other articles published on Jan 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+