Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராகுல் டிராவிட்டின் அதீத நம்பிக்கை.. இலங்கைக்கு எதிரான ஸ்கெட்ச் ரெடி.. பக்கா ப்ளேயிங் 11 இதோ- விவரம்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடப்போகும் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

இதற்காக ஷிகர் தவான் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணி ராகுல் டிராவிட் தலைமையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் ஒருநாள் ஆட்டம்

முதல் ஒருநாள் ஆட்டம்

இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இலங்கை அணியில் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் போட்டிகள் ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பயிற்சிகளுக்கு கூடுதல் அவகாசம் பெற்றுள்ள இந்திய அணியில் யார் யார் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார்கள் என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன.

டாப் ஆர்டர் பேட்டிங்

டாப் ஆர்டர் பேட்டிங்

இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் உடன் இளம் வீரர் ப்ரித்வி ஷா ஓப்பனிங் களமிறங்கவுள்ளார். பிரித்வி ஷா விஜய் ஹசாரே, ஐபிஎல் போன்ற உள்நாட்டு தொடர்களில் மிகச்சிறப்பாக ரன்குவித்தார். தவான் & பிரித்வி ஆகியோர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஓப்பனிங்கில் ஏற்கனவே பலப்போட்டிகளில் விளையாடியவர்கள். எனவே ஓப்பனிங்கிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிடில் ஆர்டரில் யார்

மிடில் ஆர்டரில் யார்

தனது முதல் சர்வதேச போட்டியிலேயே சிறப்பாக விளையாடி அசத்திய சூர்யகுமார் யாதவ், முதல் விக்கெட்டிற்கு களமிறங்கவுள்ளார். அனுபவ வீரர்களான சஞ்சு சாம்சன், மணிஷ் பாண்டே ஆகியோர் மிடில் ஆர்டரில் களமிறங்குகின்றனர். இதில் மணிஷ் பாண்டே ஐபிஎல் போட்டியில் சரிவர செயல்படவில்லை என்றாலும், அவர் மீது டிராவிட் நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை ஹர்த்திக் பாண்ட்யா, மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகியோர் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது.

பந்துவீச்சு

பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சில் ஏற்கனவே ஹர்த்திக் பாண்ட்யா உள்ளதால், துணை கேப்டன் புவனேஷ்வர் குமார் மற்றும் ஐபிஎல்-ல் சிறப்பாக விளையாடிய தீபக் சஹார் ஆகியோர் களமிறங்குகின்றனர். இதே போல சுழற்பந்துவீச்சில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி மீண்டும் சேரவுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Krunal Pandya Hugs Charith Asalanka! Is It 'Dravid Effect'? | IND vs SL 1st ODI | OneIndia Tamil
ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், மணிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், தீபக் சஹார், யுஸ்வேந்திர சாஹல்

Story first published: Saturday, July 17, 2021, 15:41 [IST]
Other articles published on Jul 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+