Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லியில் நாளை 5வது ஒருநாள் போட்டி.. ஆஸி.யை வீழ்த்த இந்தியா வியூகம்

டெல்லி:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி புதிய வியூகங்களை வகுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ராஞ்சி மற்றும் மொகாலியில் நடைபெற்ற 3-வது, 4-வது போட்டிகளில் ஆஸ்திரேலிய வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் தமது இருப்பையும் பதிவு செய்து கொண்டது.

இமாலய ரன்குவிப்பு

இமாலய ரன்குவிப்பு

குறிப்பாக, மொகாலியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஒரு நாள் தொடர் 2-2 என சமனில் உள்ளது.

தொடர் நெருக்கடி

தொடர் நெருக்கடி

அதனால், டெல்லியில் நாளை நடைபெறும் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி நெருக்கடியில் உள்ளது. கடைசி போட்டியைப் பொறுத்தவரை, கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்டுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும்.

உலக கோப்பை வாய்ப்பு

உலக கோப்பை வாய்ப்பு

அதில், நன்றாக விளையாடினால் உலகக் கோப்பை வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் உலக கோப்பை தொடரை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

அம்பதி ராயுடுக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் திரும்ப சேர்க்கப்பட வாய்ப்பில்லை. விஜய் சங்கர், கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் மிடில் ஆர்டரில் இருப்பார்கள்.

பொறுப்பு முக்கியம்

பொறுப்பு முக்கியம்

ரிஷப் பண்ட் வாய்ப்பை பயன்படுத்தினால் உலகக் கோப்பை அணியில் 2-வது விக்கெட் கீப்பராக இடம்பெறலாம். பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா கூட்டணி பொறுப்புணர்ந்து செயல்படும் என்று தெரிகிறது.

இந்திய உத்தேச அணி

இந்திய உத்தேச அணி

இந்திய உத்தேச லெவன் அணி விவரம் வருமாறு: ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா.

Story first published: Tuesday, March 12, 2019, 15:35 [IST]
Other articles published on Mar 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+