Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா சார்பில் அதிக 'முட்டை' சாப்பிட்டவர் யார் தெரியுமா...?

டெல்லி: 1992ம் ஆண்டுக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் முதல் உலகக் கோப்பைப் போட்டித் தொடரை சந்திக்கப் போகிறது இந்தியா. உலகக் கோப்பைப் போட்டிகளில் சச்சின் பல சாதனைகளை தனது பாக்கெட்டில் வைத்துள்ளார்.

1992ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த அனைத்து உலகக் கோப்பைப் போட்டிகளிலும் சச்சின் பங்கேற்று ஆடியுள்ளார். இதில் 2011ம் ஆண்டு நடந்த போட்டித் தொடரை இந்தியா வென்று 2வது முறையாக சாம்பியன் ஆனது.

சச்சின் டெண்டுல்கர்தான் அதிக அளவிலான தொடர்களில் பங்கேற்ற வீரர். மொத்தம் 6 தொடர்களில் அவர் ஆடியுள்ளார். இது உலக சாதனையும் கூட. அதேபோல பாகிஸ்தானின் ஜாவேத் மியான்தத்தும் 6 தொடர்களில் பங்கேற்றுள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் இந்தியாவின் சாதனைகள்

அதிக போட்டிகளில் ஆடிய வீரர்

அதிக போட்டிகளில் ஆடிய வீரர்

சச்சின்தான் அதிக போட்டிகளில் ஆடிய வீரர். மொத்தம் 45 போட்டிகளில் ஆடியுள்ளார்.

அதிக போட்டிகளுக்கு கேப்டன்

அதிக போட்டிகளுக்கு கேப்டன்

அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் முகம்மது அசாருதீன். 1992 முதல் 99 வரை மொத்தம் 23 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

அதிக கேட்ச் (வீரர்)

அதிக கேட்ச் (வீரர்)

ஒரு வீரராக அதிக கேட்ச் பிடித்தவர் கும்ப்ளே. 18 போட்டிகளில் 14 கேட்ச் பிடித்துள்ளார்.

அதிக டிஸ்மிஸல்கள் (விக்கெட் கீப்பராக)

அதிக டிஸ்மிஸல்கள் (விக்கெட் கீப்பராக)

கிரண் மோரே. 1987 முதல் 1992ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 12 கேட்ச், 6 ஸ்டம்பிங்குடன் மொத்தம் 18 டிஸ்மிஸல்கள்.

அதிக விக்கெட்கள்

அதிக விக்கெட்கள்

ஜாகீர்கான் மற்றும் ஸ்ரீநாத்தான் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள். இதில் ஜாகீர்கான் 23 போட்டிகளில் வீழ்த்தியுள்ளார். ஸ்ரீநாத் 33 போட்டிகளில் வீழ்த்தியுள்ளார்.

சிறந்த பந்து வீச்சு

சிறந்த பந்து வீச்சு

ஆசிஷ் நெஹ்ரா. 2003 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

44 போட்டிகளில் 2278 ரன்களைக் குவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

ஒரு போட்டியில் அதிக ரன் குவித்தவர்

ஒரு போட்டியில் அதிக ரன் குவித்தவர்

1999ம் ஆண்டு நடந்த போட்டியில் இலங்கைக்கு எதிராக 183 ரன்களைக் குவித்துள்ளார் கங்குலி.

அதிக சதம்

அதிக சதம்

6 சதங்களை அடித்து பட்டியலில் முன்னணியில் உள்ளார் சச்சின்.

அதிக வாத்து..!

அதிக வாத்து..!

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். மொத்தம் 4 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

ஒரு தொடரில் அதிக ரன்கள்

ஒரு தொடரில் அதிக ரன்கள்

இதுவும் சச்சின் வசமே. 2003 தொடரில் 673 ரன்களைக் குவித்துள்ளார் சச்சின்.

அதிகபட்ச அணி ரன் குவிப்பு

அதிகபட்ச அணி ரன் குவிப்பு

2007ல் பெர்முடாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்களைக் குவித்தது.

கேவலமான ரன் குவிப்பு

கேவலமான ரன் குவிப்பு

2003ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 41.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

செம ஸ்டிரைக் ரேட்

செம ஸ்டிரைக் ரேட்

சூப்பர் ஸ்டார் கபில் தேவ். 1992ல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 33 ரன்களைக் குவித்தார் கபில். அந்த ஆட்டத்தில் அவரது ஸ்டிரைக் ரேட் 206.25 ஆகும்.

Story first published: Friday, January 23, 2015, 15:05 [IST]
Other articles published on Jan 23, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+