Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிங்க் பால் டெஸ்ட்.. வரலாற்றில் முதன்முறை..சதம் அடித்து சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. செமயான ஆட்டம்

சிட்னி: பகலிரவு டெஸ்டில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 127 ரன்கள் அடித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.

இதனை தொடர்ந்து இந்தியாவுக்கும்-ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பிங்க் பால் டெஸ்ட் என்று அழைக்கப்படும் பகலிரவு டெஸ்ட்(டே/நைட்) டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடப்பது இது இரண்டாவது முறையாகும். இந்திய மகளிர் அணி பங்கேற்கும் முதல் பகலிரவு டெஸ்ட் இதுவாகும்.

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீச முடிவு எடுத்தது. இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இந்தியா விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி விடலாம் என்று ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தப்பு கணக்கு போட்டு விட்டனர். பிங்க் பால் டெஸ்ட்டில் ஆண்கள் கிரிக்கெட் வீரர்களே திணறும் வேளையில், எந்தவித சிரமும் இன்றி, பந்துகளை பவுண்டரிகளுக்கு ஓடவிட்டு இந்தியாவுக்கு அட்டகாசமான அடித்தளம் அமைத்தனர் ஸ்மிருதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும்.

அட்டகாசமான சதம்

அட்டகாசமான சதம்

முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாலி வர்மா 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் மந்தனாவுடன் ஜோடி சேர்ந்த பூனமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் தனக்கே உரித்தான ஷாட்கள் மூலம் அடிக்கடி எல்லை கோட்டுக்கு பந்துகளை ஓட விட்டார் ஸ்மிருதி மந்தனா. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா, அட்டகாசமான சதம் அடித்து சாதனை படைத்தார்.

127 ரன்கள்

127 ரன்கள்

பகலிரவு டெஸ்டில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார். 216 பந்துகளில் 22 பவுண்டரிகளை ஓட விட்டு, ஒரு சிக்ஸர் விளாசி 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஆஸ்திரேலியாவில் முதல் சதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் இவர் படைத்தார். ஸ்மிருதி மந்தனாவின் ஒவ்வொரு ஷாட்களும் மிகவும் நேர்த்தியாக இருந்தது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. தொடர்ந்து பூனம்(36 ரன்), மிதாலி ராஜ்( 30) ரன்கள் ஆகியோர் சிறப்பான பங்களிப்பு கொடுத்து அவுட்டானார்கள். யஷ்டிகா பாடியா 19 ரன்னில் அவுட்டானார். முதல் நாள் ஆட்டமும் சிறிது நேரம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது நாள் ஆட்டமும் மழையின் காரணமாக முன்கூட்டியே முடிக்கப்பட்டது.

ஸ்மிருதி மந்தனாவுக்கு வாழ்த்து மழை

ஸ்மிருதி மந்தனாவுக்கு வாழ்த்து மழை

இந்தியா இதுவரை 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நான்கு நாள் மட்டுமே நடக்கும் என்பதால் இந்த போட்டி டிரா ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சிறப்பான சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆண்கள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஐ.சி.சி, இந்திய கிரிக்கெட் வாரியமும் மந்தனாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. மத்திய விளையாட்டு துறை துறை அமைச்சர் கிரண் ரிஜிஜிவும் பாராட்டு கூறியுள்ளார். நெட்டிசன்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Story first published: Friday, October 1, 2021, 22:09 [IST]
Other articles published on Oct 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+