Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ஜொலிக்கும் இளம் படை.. யாருக்கெல்லாம் இடம்? கேப்டன் யார்?

மும்பை: இலங்கை தொடருக்காக மெகா இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக இலங்கை சுற்றுப்பயணத்தை திட்டமிட்டுள்ளது பிசிசிஐ.

2 இந்திய அணிகள்

2 இந்திய அணிகள்

இந்திய அணி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14 தேதி வரை நடக்கிறது. இது ஒரு புறம் இருக்க, 2வதாக ஒரு இந்திய அணி உருவாக்கப்பட்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் அனுப்பப்படவுள்ளது. இந்த அணியில் இளம் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தவுள்ளனர்.

அட்டவணை வெளியீடு

அட்டவணை வெளியீடு

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வீரர்கள் வலைப்பயிற்சிகாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இடையே கேப்டன் பதவிக்கு போட்டி நடைபெற்று வந்த நிலையில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீரர்கள் விவரம்

வீரர்கள் விவரம்

ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா

Story first published: Friday, June 11, 2021, 13:46 [IST]
Other articles published on Jun 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+