Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே நாளில் "டபுள் அட்டாக்".. சீட்டுக்கட்டு போல சரிந்த ஆப்கன்.. பெங்களூரில் நடந்தது என்ன?

Recommended Video

சீட்டுக்கட்டு போல சரிந்த ஆப்கன்.. பெங்களூரில் நடந்தது என்ன?- வீடியோ

பெங்களூரு: முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் ஆடிய ஆப்கானிஸ்தான் இந்தியாவிடம் இன்று நல்லதொரு பாடத்தைக் கற்றுக் கொண்டது. ஒரே நேரத்தில் சுழலையும், வேகத்தையும் சமாளிக்க முடியாமல் அந்த அணி சரிந்து போனது.

இந்திய ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்தியா தனது முதல் இன்னிங்ஸை இன்று 474 ரன்களுக்குப் பறி கொடுத்தது. ஷிகர் தவான் 107, முரளி விஜய் 105 ரன்கள் எடுத்தனர். அதிரடி காட்டிய பாண்டியா 71 ரன்களைக் குவித்தார்.

ஒரே நாளில் இரு தாக்குதல்

ஒரே நாளில் இரு தாக்குதல்

அடுத்து ஆட வந்த ஆப்கானிஸ்தானை இந்தியாவின் சுழல் மற்றும் வேகம் ஆகியவை மிரட்டி விட்டன. ஆப்கானிஸ்தான் தனது மோசமான ஆட்டத்தாதல் தற்போது பாலோ ஆன் வாங்கி ஆடியது.

அபார பந்து வீச்சு அஸ்வின்

அபார பந்து வீச்சு அஸ்வின்

முதல் இன்னிங்ஸில் அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தவர் ஆர். அஸ்வின். தனது அபாரமான சுழற்பந்து வீச்சால் ஆப்கானிஸ்தானை நிலை குலைய வைத்து விட்டார் அஸ்வின்.

சீட்டுக்கட்டு போல

சீட்டுக்கட்டு போல

கமத் ஷாஷாத் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்டிக் பாண்டியாவின் அற்புதமான துரோவில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு ஆப்கானிஸ்தான் வீரர்கள் வரிசையாக அட்டமிழந்து வெளியிறினார்கள்.

அஸ்வின்- உமேஷ் அபாரம்

அஸ்வின்- உமேஷ் அபாரம்

அஸ்வின் 4 விக்கெட்களைச் சாய்த்தார். பின்னர் பாலோ ஆன் வாங்கிய ஆப்கானிஸ்தானை உமேஷ் யாதவ் மிரட்டி விட்டார். அவரது புயல் வேகப் பந்து வீச்சால் ஆப்கானிஸ்தான் 2வது இன்னிங்ஸிலும் தடுமாறியது.

இரட்டைப் பாடம்

இரட்டைப் பாடம்

இன்று ஒரே நாளில் இரண்டு பாடத்தை இந்தியா ஆப்கானிஸ்தானுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. சுழற்பந்து வீச்சின் மூலம் முதல் பாடத்தையும், வேகப் பந்து வீச்சின் மூலம் 2வது பாடத்தையும் இந்தியா கற்றுக் கொடுத்தது.

Story first published: Friday, June 15, 2018, 17:48 [IST]
Other articles published on Jun 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+