Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2015ல் இந்திய கிரிக்கெட்.. தெ. ஆப்பிரிக்காவுக்கு ஆப்பு.. இலங்கைக்கு குத்து.. பாக்.குக்கு உதை!

சென்னை: கிரிக்கெட்டுக்கு 2015ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டு. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் கிடைத்த ஆண்டு. உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா தோல்வியுற்ற போதிலும் கூட தொடர் வெற்றிகளால் உலக அணிகளை பதற வைத்த ஆண்டு.. சில முக்கிய வெற்றிகளையும், சில சோதனைகளையும் சந்தித்த ஆண்டு இது.

விராத் கோஹ்லி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஆண்டு இது. இந்தியாவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்தடெஸ்ட் தொடரை கோஹ்லி படையினர் அபாரமாக வென்று குஷிப்படுத்திய ஆண்டு இது.

இந்திய கிரிக்கெட்டில் இந்த ஆண்டு நடந்த சில சந்தோஷங்களைப் பார்ப்போம்.

தென் ஆப்பிரிக்காவுக்கு டெஸ்ட் ஆப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு டெஸ்ட் ஆப்பு

இந்தியா வந்த தென் ஆப்பிரிக்க அணி டுவென்டி, ஒரு நாள் போட்டித் தொடர் என வரிசையாக வென்று ரசிகர்களை டென்ஷன்படுத்திய நிலையில் கோஹ்லி தலைமையிலான டெஸ்ட் அணி, அட்டகாசமாக ஆடி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தது. 2வது டெஸ்ட் மட்டும் மழையால் டிரா ஆனது. மற்ற 3 போட்டிகளையும் இந்தியா அபாரமாக வென்றது.

இலங்கைக்கு கும்மாங்குத்து

இலங்கைக்கு கும்மாங்குத்து

தென் ஆப்பிரிக்காவைப் புரட்டி எடுப்பதற்கு முன்பு இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரிலும் இந்தியா அசத்தியது. விராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணி சந்தித்த முதல் முழுமையான டெஸ்ட் தொடர் இதுதான். இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று அசத்தியது. 22 வருடங்களுக்குப் பின்னர் இலங்கையில் இந்தியா வென்ற டெஸ்ட் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வினின் எழுச்சி

அஸ்வினின் எழுச்சி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த டெஸ்ட் தொடரில் அவர் விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி அட்டகாசம் செய்தார். இந்த ஆண்டில் 7வது முறையாக அவர் 5 விக்கெட் வீழ்த்தியும் சாதனை படைத்தார். 4 டெஸ்ட் போட்டிகளில் 31 விக்கெட்களைச் சாய்த்து அவர் தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

மீண்டு வந்த ஜடேஜா

மீண்டு வந்த ஜடேஜா

ஒரு நாள் அணியில் இடம் பிடிக்க முடியாமல் போன ரவீந்திர ஜடேஜாவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி் கொண்ட அவர் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். மொஹாலி டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்களைச் சாய்த்து தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினார். மேலும் ஆறு இன்னிங்ஸ்களில் 109 ரன்களையும் எடுத்தார்.

நாக்பூரை கலங்கடித்த அஸ்வின் புயல்

நாக்பூரை கலங்கடித்த அஸ்வின் புயல்

அஸ்வின், நாக்பூரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிரமிப்பூட்டும் வகையில் பவுலிங் செய்தார். இந்தப் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் அவர் மொத்தமாக 12 விக்கெட்களைச் சாய்த்து சாதனை படைத்தார். 1996ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் அதிக விக்கெட் சாய்த்தது இதுவே முதல் முறையாகும்.

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை. அந்தப் பெருமையை இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் தக்க வைத்தது இந்திய அணி. இந்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது, பாகிஸ்தானை 76 ரன்களில் சாய்த்தது இந்தியா. இத்துடன் சேர்த்து இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் மோதிய 6 போட்டிகளிலுமே இந்தியாதான் வென்றுள்ளது.

தென் ஆப்பிரிக்காவைப் பந்தாடியது

தென் ஆப்பிரிக்காவைப் பந்தாடியது

அதேபோல உலகக் கோப்பைப் போட்டியில் இன்னொரு புதிய சாதனையையும் படைத்தது இந்தியா. அதாவது தென் ஆப்பிரிக்காவை இதுவரை வெல்லாமல் இருந்த இந்தியா, இந்த முறை நடந்த போட்டியில் அபாரமாக ஆடி தென் ஆப்பிரிக்காவைப் புரட்டி எடுத்தது. 130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை துரத்தியடித்தது இந்தியா.

வங்கதேசத்தை வறுத்தெடுத்த ரோஹித் சர்மா

வங்கதேசத்தை வறுத்தெடுத்த ரோஹித் சர்மா

உலகக் கோப்பைப் போட்டியின்போது காலிறுதிப் போட்டியில் வங்கதேசம் கடும் சவாலைக் கொடுத்தது இந்தியாவுக்கு. ஆனால் ரோஹித் சர்மா அதை நையப்புடைத்து விட்டார். அபாரமாக ஆடிய அவர் 137 ரன்களைக் குவித்து துவம்சம் செய்து விட்டார். இந்தியா அரை இறுதிக்குள் நுழைந்தது.

Story first published: Wednesday, December 23, 2015, 9:41 [IST]
Other articles published on Dec 23, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+