உலக கோப்பை இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் வேண்டும்? ராகுல் டிராவிட் சொல்றதை பாருங்க
மும்பை: உலக கோப்பையில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான ராகுல்டிராவிட் விருப்ப பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த 15 பேர் கொண்ட பட்டியலில் உள்ள வீரர்கள் உலக கோப்பையில் களம் கண்டால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என்று கருதுகிறார் ராகுல் டிராவிட்.
பிப்ரவரி 2வது வாரத்தில் உலக கோப்பை போட்டித் தொடர் தொடங்க உள்ளது. இதையொட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிடம் ராகுல் டிராவிட் அளித்துள்ள வீரர்களின் விருப்ப பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ரோகித் ஷர்மா வேண்டாமே..
ராகுல் டிராவிட் கருத்துப்படி, ரோகித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக இறங்குவதற்கு பதிலாக, மிடில் ஆர்டரில் இறங்க வேண்டும் என்று கருதுகிறார். தவானுடன், ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என்பது டிராவிட் விருப்பம்.

தொடக்க ஆட்டக்காரர் ரஹானே
ராகுல் டிராவிட் வெளியிட்டுள்ள விருப்பப்பட்டியல் இதுதான். தொடக்க ஆட்டக்காரர்களாக, தவான், ரஹானே.

மிடில் ஆர்டர் பலம்
நடுவரிசையில், கோஹ்லி, ரெய்னா, ரோகித் ஷர்மா, டோணி ஆகியோர் களமிறங்க வேண்டும். அம்பட்டி ராயுடுவை, கூடுதல் விக்கெட் கீப்பராக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஜடேஜாவும் சுழல்தான்
சுழற்பந்து பிரிவு என்று எடுத்துக் கொண்டால், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோர் தேவை.

ஒரே ஆல்ரவுண்டர்
ஆல்ரவுண்டர் பிரிவில் இந்தியாவில் ஒருவர்தான் தற்போதைய சூழ்நிலையில் தேருகிறார். அவர் ஸ்டூவர்ட் பின்னி.

வேகத்துக்கு..
வேகப்பந்து பிரிவில் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் இடம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு ராகுல் டிராவிட் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications