Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தடுமாறிய இந்தியா.. காப்பாற்றிய ஸ்ரேயாஸ், புஜாரா.. முதல் நாள் முடிவில் சாதகம் யாருக்கு ? IND vs BAN

சட்டோகிராம் : வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி பெரும் சிக்கலில் இருந்து தப்பியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி , வங்கதேச வேகப்பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டனர். இதனால் 6 ஓவர் முடிவில் வங்கதேச அணி சுழற்பந்துவீச்சை அறிமுகப்படுத்தியது.

இந்தியா தடுமாற்றம்

இந்தியா தடுமாற்றம்

சுப்மான் கில் 20 ரன்களிலும், கேப்டன் கேஎல் ராகுல் 22 ரன்கிளிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதனால் 41 ரன்கள் வரை ஒரு விக்கெட் கூட இழக்காத இந்திய அணி, 48 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பண்ட் அதிரடி

பண்ட் அதிரடி

அப்போது களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை விளையாடி, சிக்சர், பவுண்டரிகளை விரட்டினார். இதன் மூலம் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது, இதனால் மதிய நேர உணவு இடைவேளையின் போது,இந்திய அணி 85 ரன்களை எட்டியது. 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 46 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், தனது விக்கெட் பறிகொடுத்தார்.

புஜாரா அபாரம்

புஜாரா அபாரம்

இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இந்த நிலையில், புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி, ஆடுகளத்தில் நங்கூரம் போட்டு வங்கதேச பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியை கொடுத்தனர். இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை டி20 கிரிக்கெட் போல் ஆடும் நிலையில், டெஸ்ட் கிரக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட் போல் தான் ஆட வேண்டும் என்று புஜாரா, கிளாஸ் எடுத்தார்.

278 ரன்கள்

278 ரன்கள்

ஸ்ரேயாஸ், புஜாரா ஜோடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் திணறினர். 3 ஆண்டுகளுக்கு பிறகு புஜாரா சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்களில் அவர் வெளியேறினார். அக்சர் பட்டேல் 14 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழக்க முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 278 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

 யாருக்கு சாதகம் ?

யாருக்கு சாதகம் ?

ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 82 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்சில் குறைந்தபட்சம் 350 ரன்களுக்கு மேலாவது அடிக்க வேண்டும். அப்போது தான் வங்கதேசத்திற்கு நெருக்கடி தர முடியும். தறபோது, அஸ்வின் மட்டும் தான் பேட்டிங்கில் இருக்கிறார். இந்தியா வலுவான நிலையில் இருந்த நிலையில், கடைசி கட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்ததால், வங்கதேசமும் தற்போது ஆட்டத்திற்குள் வந்துவிட்டது.

Story first published: Wednesday, December 14, 2022, 16:52 [IST]
Other articles published on Dec 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+