Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பட்டேல் சுழலில் ஆட்டம் கண்டது இந்தியா.. 325 ரன்களுக்கு ஆட்டமிழப்பு..!!

மும்பை: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மழை காரணமாக போட்டி நேற்று தாமதமாக தொடங்கியது.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் புஜாரா, கோலி ஆகியோர் டக் அவுட்டாக, மாயங் அகர்வால் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தொடக்கம்

தொடக்கம்

சாஹா- மாயங் அகர்வால் ஜோடி சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டது. மாயங் அகர்வால் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்தார். 221 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோருடன் 2வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது. இதில் சாஹா மேலும் 2 ரன்கள் சேர்த்து 27 ரன்களில் ஏஜாஸ் பட்டேல் சுழலில் ஆட்டமிழந்தார்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

தமிழக வீரர் அஸ்வினும் டக் அவுட்டாகி வெளியேற, இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல், மாயங் அகர்வால் மீண்டும் அணியின் ஸ்கோரை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சாதனை

சாதனை

சிறப்பாக விளையாடிய மாயங் அகர்வால் 150 ரன்களில் வெளியேற, இறுதியில் கடுமையாக போராடிய அக்சர் பட்டேல் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் முதல் இன்னிங்சில் இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து வீரர் ஏஜாஸ் பட்டேல், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் ஜிம் லேக்கர், கும்ப்ளேவிற்கு பிறகு ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வழ்த்தியவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

Recommended Video

அதிக முறை 5 விக்கெட்டுகள்.. Axar Patel படைத்த புதிய சாதனை
நியூசிலாந்து

நியூசிலாந்து

ஏஜாஸ் பட்டேலின் இந்த சாதனைக்கு மும்பை ரசிகர்களும், இந்திய அணி வீரர்களும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். இதனையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. 4 ஓவர் முடிவிலேயே அந்த அணி 14 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Story first published: Saturday, December 4, 2021, 14:47 [IST]
Other articles published on Dec 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+