Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனல் பறக்கும் பும்ரா யாக்கர்.. ஸ்விங் செய்த புவி.. ஆனால் ரோகித் எடுத்த தவறான் முடிவு

தர்மசாலா: இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து வருகிறது.

4 ஆண்டுகளுக்கு பிறகு தர்மசாலாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஏனெனில் உலகின் அழகான மைதானம் என்றால், அதனை தர்மசாலா என்று தான் கிரிக்கெட் ரசிகர்கள் சொல்வாகள்.

குளிர்ந்த சூழல்

குளிர்ந்த சூழல்

இந்த நிலையில், தர்மசாலாவில் மழை பொழிவு இருந்ததது. ஆனால் ஆட்டத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படவில்லை. குளிர்ந்த சூழல் நிலவியதால் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை

புவனேஸ்வர் குமார்

புவனேஸ்வர் குமார்

ஆட்டம் தொடங்கியதும் புவனேஸ்வர் குமார் பந்தை லாவமாக ஸ்விங் செய்தார். இதனால் இலங்கை வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். இதனால் புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே இலங்கை அணியால் அடிக்க முடிந்தது.

பும்ரா யாக்கர்

பும்ரா யாக்கர்

இதே போன்று பும்ராவும் தனது வழக்கமான அனல் பறக்கும் பந்துவீச்சை வீசினார். பும்ரா வீசிய யாக்கரில் கிட்டதட்ட விக்கெட் விழுந்தது. ஆனால் எல்.பி.டபிள்யூ லைனில் பந்து ஜஸ்ட் மிஸ் ஆனதால் இலங்கை வீரர் குனதிலக்கா தப்பித்தார். 2வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே இலங்கை வீரர்கள் சேர்த்தனர்.

ரோகித் தவறு

ரோகித் தவறு

இதே போன்று புவனேஸ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரில் இலங்கை அணி 6 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பும்ரா வீசிய அடுத்த ஓவரிலும் யாக்கர் மழை பொழிய இலங்கை அணி அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே அடித்தது. ஆனால் அடுத்த ஓவரை புவனேஸ்வர் குமாருக்கு தராமல் ரோகித் சர்மா ஹர்சல் பட்டேலுக்கு தந்தார். அதன் பிறகு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ரோகித் ஓவர் தந்தார்.

ரன் சேர்த்த இலங்கை

ரன் சேர்த்த இலங்கை

இதனால் ரன் சேர்க்க திணறி கொண்டிருந்த இலங்கை அணி, சுழற்பந்துவீச்சை அடிக்க தொடங்கினர். இது ரோகித் சர்மா செய்த தவறாக பார்க்கப்பட்டது. குறிப்பாக ஜடேஜா வீசிய 8வது ஓவரில் குனதிலகா சிக்ஸ், பவுண்டரி, சிக்ஸ என ரன்களை குவிக்க, அடுத்த பந்தையும் அடிக்க முற்பட்டு 38 ரன்களில் அவுட்டானார். தற்போது பெரிய இலக்கை அடிக்க வேண்டிய நெருக்கடியில் இலங்கை வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

Story first published: Saturday, February 26, 2022, 20:04 [IST]
Other articles published on Feb 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+