ஐசிசி ஒரு நாள் போட்டி அணிகளுக்கான தரவரிசை.. 2வது இடத்தில் இந்தியா!
Recommended Video

டெல்லி: ஐசிசி ஒருதினப் போட்டிக்கான திருத்தப்பட்ட ஆண்டு தரவரிசையில் 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்தது. இந்தியா 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஐசிசி வெளியிடும் ஆண்டு தரவரிசைப் பட்டியலில் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 125 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தை தக்க வைத்தது.

2014-15 சீசனில் நடந்த போட்டிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதே நேரத்தில் அந்த ஆண்டுக்கான ஆட்டங்களுக்கு ஏற்ப தகுதி மதிப்பெண்கள் ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்பட்டுள்ளது. 2015-16, 2016-17 சீசன்களில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இந்தியா கூடுதலாக 4 புள்ளிகளைப் பெற்று, முதலிடத்தை தக்க வைத்தது.
தென்னாப்பிரி்க்கா 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3வது இடத்திலும், நியூசிலாந்து 4வது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து 5, இலங்கை 6, பாகிஸ்தான் 7, வங்கதேசம் 8, வெஸ்ட் இண்டீஸ் 9, ஜிம்பாப்வே 10வது இடத்தில் உள்ளன.
இந்த நிலையில், ஒருதினப் போட்டிக்கான திருத்தப்பட்ட ஆண்டு தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, 8 புள்ளிகளை அதிகம் பெற்ற இங்கிலாந்து, 125 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.
ஒரு புள்ளியை இழந்த இந்தியா, 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. தென்னாப்பிரிக்கா 3, நியூசிலாந்து 4, ஆஸ்திரேலியா 5, பாகி்ஸ்தான் 6வது இடத்தில் உள்ளன. வங்கதேசம் 7, இலங்கை 8, வெஸ்ட் இண்டீஸ் 9, ஆப்கானிஸ்தான் 10, ஜிம்பாப்வே 11, அயர்லாந்து 12வது இடத்தில் உள்ளன.
டி-20 போட்டிகளுக்கான தரவரிசையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 130 புள்ளிகளுடன் பாகிஸ்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. இரண்டு புள்ளிகளை கூடுதலாகப் பெற்றுள்ள இந்தியா, 123 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 4, இங்கிலாந்து 5, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 6வது இடத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications