Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றி அருகே இந்தியா.. போராடிய வங்கதேசம் சரிந்தது எப்படி? இன்னும் ஒரு ஆபத்து இருக்கு

சட்டோகிராம் : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியதால் இந்திய அணியின் பந்துவீச்சு கொஞ்சமும் எடுபடவில்லை. ஆனால், அதனையும் மீறி இந்திய வீரர்கள் யுத்திகள அமைத்து விக்கெட்டுகளை தூக்கினர்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியாவுக்கு நெருக்கடி

இந்தியாவுக்கு நெருக்கடி

254 ரன்கள் என்ற இலக்குடன் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் அதிரடி காட்டியது. குறிப்பாக சுப்மான் கில், புஜாரா ஆகியோர் சதம் விளாசினர்.இதனால் இந்திய அணி 2வது இன்னிங்ஸ் முடிவில் 258 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி தங்களது கடைசி இன்னிங்சை தொடர்ந்தது. ஆடுகளத்தின் தன்மை திடீரென்று பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது.

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

இதனால் 2 நாள் எஞ்சிய நிலையில் வங்கதேசம் இலக்கை எட்டிவிடுமோ என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. 42 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி 4வது நாள் ஆட்டத்தை வங்கதேச அணி வீரர்கள் தொடங்கினர் . தொடக்க வீரர்கள் நஜிமுல் மற்றும் ஜாகீர் ஆகியோர் பொறுப்பாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 124 ரன்களை சேர்த்தது.

அக்சர் மேஜிக்

அக்சர் மேஜிக்

இந்த நிலையில், நஜிமுல் 67 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியாவுக்கு கொஞ்சம் ஒளி பிறந்தது. அக்சர் பட்டேல் தனது சுழற்பந்துவீச்சு தாக்குதலை அதிகப்படுத்தினார். இதனால் யாசிர் அலி 5 ரன்களில் ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸ் 19 ரன்களில் வெளியேறினார். இதே போன்று முஸ்பிகுர் ரஹிம் 23 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.

ஜாகிர் சதம்

ஜாகிர் சதம்

ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும், தொடக்க வீரர் ஜாகிர் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். ஆனால் அடுத்த பந்திலேயே கவன குறைவு காரணமாக அஸ்வின் பந்தில் கோலியிடம் கேட்ச் ஆனார். நுருல் ஹசன் 3 ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 272 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

வெற்றிக்கு வழி என்ன?

வெற்றிக்கு வழி என்ன?

தற்போது கேப்டன் ஷகிபுல் ஹசன் ரன்களுடனும், மிராஜ் ஹசன் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகளும், வங்கதேச வெற்றிக்கு 241 ரன்களும் தேவைப்படுகிறது. மிராஜ் ஹசன், ஷகிபுல் ஹசன் ஜோடியை இந்தியா எவ்வளவு விரைவாக வீழ்த்துகிறார்களோ, அவ்வளவு இந்தியாவுக்கு நல்லது.

Story first published: Saturday, December 17, 2022, 17:44 [IST]
Other articles published on Dec 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+