Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவோட சுற்றுப்பயணத்தை எதிர்பார்த்து காத்துக்கிட்டிருக்கேன்... ஸ்டீவ் ஸ்மித்

சிட்னி : ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் இந்திய அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அக்டோபர் முதல் ஜனவரி 2021 வரை இந்த தொடர் நீடிக்க உள்ளது.

3 சர்வதேச டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் பகலிரவு போட்டி உள்பட 4 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.

இந்நிலையில் இந்தியாவின் சுற்றுப்பயணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

அக்டோபரில் துவக்கம்

அக்டோபரில் துவக்கம்

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் வரும் அக்டோபரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 சர்வதேச டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளனர். அக்டோபர் 11ல் பிரிஸ்பேனில் இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி துவங்கவுள்ளது. தொடர்ந்து 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகள் முறையே கேன்பெரா மற்றும் அடிலெய்டில் நடைபெறவுள்ளன.

பகலிரவு போட்டி

பகலிரவு போட்டி

இதேபோல 4 டெஸ்ட் போட்டிகளை இரு அணிகளும் விளையாடவுள்ளன. முதல் போட்டி டிசம்பர் 3ம் தேதி பிரிஸ்பேனில் துவங்கவுள்ளது. இரண்டாவது போட்டி அடிலெய்டில் டிசம்பர் 11ம் தேதி துவங்கி 15 வரை பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளன. அடுத்தடுத்த போட்டிகள் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெறவுள்ளன.

காத்திருக்க முடியவில்லை

காத்திருக்க முடியவில்லை

இந்நிலையில் ஜனவரி 12ம் தேதி ஒருநாள் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ளது. இதன் அடுத்தடுத்த போட்டிகள், ஜனவரி 15ல் மெல்போர்னிலும் 17ல் சிட்னியிலும் நடைபெறவுள்ளது. இதனிடையே இந்த தொடருக்காக தன்னால் காத்திருக்க முடியவில்லை என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கோலி சிறப்பானவர்

கோலி சிறப்பானவர்

ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய ஸ்டீவ் ஸ்மித், இந்த தொடரை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து பேசிய ஸ்மித், அவர் சிறப்பானவர் என்றும் இந்திய அணியை அவர் வழிநடத்தும் விதம் ஆச்சரியத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளர்.

நினைவுகூர்ந்த ஸ்மித்

நினைவுகூர்ந்த ஸ்மித்

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை போட்டியின்போது பேசிய விராட் கோலி, இந்திய ரசிகர்கள் ஸ்டீவ் ஸ்மித்திற்கு கைதட்டல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன்மூலம் ஐசிசியின் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது அவருக்கு கிடைத்தது. இந்த நிகழ்வை நினைவுகூர்ந்துள்ள ஸ்மித், அதற்காக தான் நேரில் சென்று விராட் கோலியை பாராட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, June 21, 2020, 17:23 [IST]
Other articles published on Jun 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+