Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடுகளம் வைத்த டிவிஸ்ட்.. தவறான அணுகுமுறையால் சறுக்கிய இந்தியா.. தீபக் ஹூடா , அக்சர் அபார ஆட்டம்

மும்பை : இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது இந்திய அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் சாஹல், அக்சப் பட்டேல் ஜோடி 29 பந்துகளில் அரைசதம் அடித்தனர்.

மும்பை ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், பந்து பேட்டிற்கு சரியாக வரவில்லை . மேலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக பந்து செயல்பட்டது.

இதனால் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்று நினைத்து அதிரடியாக விளையாடி முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தனர் .

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

தொடக்க வீரர் இஷான் கிஷன் முதல் ஓவரில் 16 ரன்கள் சேர்த்தார். எனினும் அறிமுக போட்டியில் களமிறங்கிய சுப்மான் கில் 7 ரன்களில் மகீஷ் தீக்சனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இலங்கை வீரர்கள் பந்தை அடித்து ஆட முற்பட்டு தங்களது விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார்

 ரசிகர்களுக்கு ஏமாற்றம்

ரசிகர்களுக்கு ஏமாற்றம்

கடந்த ஆண்டு அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ், 10 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஒரு பவுண்டரி மட்டுமே விளாசி 7 ரன்களில் வெளியேறினார். இதே போன்று சஞ்சு சாம்சன் தனஞ்செய்யா டி சில்வா ஓவரை தூககி அடிக்க முயன்று, 5 ரன்களில் ஆட்டழிந்தார். இதனால் இந்திய அணி 46 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

முக்கிய கட்டத்தில் அவுட்

முக்கிய கட்டத்தில் அவுட்

இதனையடுத்து ஒரு பக்கம் அதிரடியாக விளையாட முயன்ற இஷான் கிஷன் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய கட்டத்தில் 29 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி தடுமாறியது. எனினும் இறுதியில் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா, அக்சர் பட்டேல் ரன்களை குவித்து இந்தியாவுக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

இறுதியில் அபாரம்

இறுதியில் அபாரம்

23 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தீபக் ஹூடா 41 ரன்கள் விளாசினார். இதில் ஒரு பவுண்டரிகளும், 4 சிக்சரும் அடங்கம். மறுமுணையில் அக்சர் பட்டேலும் பேட்டிங்கில் தனது திறமையை காட்டி 20 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. ஹசரங்கா, தீக்சனா ஓவரில் இந்திய வீரர்கள் கொஞ்சம் பொறுமை காத்திருந்தால் இந்தியா 180 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும்

Story first published: Tuesday, January 3, 2023, 21:12 [IST]
Other articles published on Jan 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+