Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித், ரிஷப் பண்ட் வெறித்தனம்..192 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா..சஞ்சு சாம்சன் மெர்சல்

அமெரிக்கா : இந்திய , வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி மழையால் அரைமணி நேரம தாமதமாக தொடங்கியது.

Recommended Video

IND vs WI 4th T20 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி *Cricket

இதனையடுத்து, டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீசுவதாக தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து முதலில் பேட் செய்ய களமிறங்கிய இந்திய அணி பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய நெருக்கடியில் களமிறங்கினர்.

ரோகித்தின் மைனஸ்

ரோகித்தின் மைனஸ்

ரோகித் சர்மா இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறுவதாக விமர்சனம் எழுந்தது. இன்றைய போட்டியில் அந்த விமர்சனத்துக்கு பதிலடி தந்தார் ரோகித் சர்மா. முதலில் இடதுகை சுழற்பந்துவீச்சாளரை வைத்து இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், பிறகு டிராக்ஸ் மற்றும் மெக்காய் என இடது கை வேகப்பந்துவீச்சாளரை பந்துவீச அழைத்தது.

ரோகித் அதிரடி

ரோகித் அதிரடி

ஆனால், ரோகித் சர்மா மெக்காய் ஓவரை பதம் பார்த்தார். சூர்யகுமார் யாதவும் தனது அதிரடியை காட்ட 3வது ஓவரில் மட்டும் 25 ரன்கள் விளாசினர். 16 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ரோகித், 2 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 33 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

ரிஷப் பண்ட் அபாரம்

ரிஷப் பண்ட் அபாரம்

தீபக் ஹூடா 19 பந்துகளில் 21 ரன்கள் சேர்க்க, ரிஷப் பண்ட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்த ரிஷப் அரைசதத்தை தவறவிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

இதனையடுத்து, சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் ஜோடி இணைந்து அதிரடியை காட்டினர். சஞ்சு சாம்சன் 23 பந்துகளில் 30 ரன்கள் குவிக்க, அக்சர் பட்டேல் 8 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார். இதில் 2 சிக்சர்கள் அடங்கும். இதனால் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. 2வது டி20 போட்டியில் மெக்காய் 6 விக்கெட்டுகளை வீழ்த்த, இன்றைய ஆட்டத்தில் 4 ஓவரில் 66 ரன்கள் விட்டு கொடுத்தார்.

Story first published: Saturday, August 6, 2022, 23:28 [IST]
Other articles published on Aug 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+