Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு அலட்சியம் கூடாது..!! இந்தியா மோசமான ஆட்டம்..!! பூரான் படைக்கு ஈஸி டார்கெட்..!!

அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அலட்சியமாக விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி பெரிய இலக்கை எட்டுவார்கள் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

முதல் போட்டியில் களமிறங்கிய இஷான் கிஷண் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கினார்.

இந்தியா தடுமாற்றம்

இந்தியா தடுமாற்றம்

கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் 18 ரன்களில் தேவையில்லாத ஷாட் ஆடி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.சொந்த மண்ணில் 100வது போட்டியில் களமிறங்கிய விராட் கோலியும் 18 ரன்களில் வெளியேற, இந்திய அணி 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ், கே.எல்.ராகுல் ஜோடி தத்தளித்த இந்திய அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

89 ரன்கள்

89 ரன்கள்

இருவரும் நிதானமாக விளையாடி சிங்கள்ஸ், அவ்வப்போது பவுண்டரி என அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல நகர்த்தினர். இந்த ஜோடி ஒரு அளவுக்கு செட்டாகி அதிரடியை காட்டலாம் என்று நினைத்த போது தான் ரன் அவுட்டில் சிக்கி பிரிந்தது. இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சூரியகுமார் அரைசதம்

சூரியகுமார் அரைசதம்

எனினும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 64 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார். தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் 24 ரன்கள் எடுத்து வெளியேற, இந்திய அணி சரிவை கண்டது. லார்டு ஷர்துல் தாக்கூர் தனது அதிரடிய காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 8 ரன்களில் நடையை கட்டினார்.

Recommended Video

IND vs WI: I'm Ready To Bat Wherever Team Requires, Been Bowling in Nets As Well- S.Yadav
 237 ஆல் அவுட்

237 ஆல் அவுட்

முகமது சிராஜ் நமக்கு எதுக்குப்பா பேட்டிங் என்பது போல் ஆடி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் தீபக் ஹூடா (29 ரன்கள்) தனி ஆளாக நின்று போராடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தார். ஆனால் யாரும் கை கொடுக்காததால் இந்திய அணி 9 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 237 ரன்களை மட்டுமே எடுத்தது.

Story first published: Wednesday, February 9, 2022, 17:41 [IST]
Other articles published on Feb 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+