Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ. 3.50 கோடி பரிசு.. நமக்கில்லை.. நமக்கில்லை... நம்பர் 1 ரேங்க்கும் போகப் போகுதே... சொக்கா சொக்கா!

கிறிஸ்ட்சர்ச்: டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, நாளை அந்த தகுதியை இழக்கப் போகிறது. கூடவே கிட்டத்தட்ட ரூ. 3.50 கோடி பரிசையும் இழக்கப் போகிறது.

கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அதை அது நாளை செய்தால் ஆஸ்திரேலியா முதல் ரேங்க்குக்கு முன்னேறி விடும். வெல்லாவிட்டாலும் கூட டிரா செய்தாலே கூட அது முதல் ரேங்க்குக்குப் போய் விடும்.

முதல் ரேங்க்கைப் பெறும் அணிக்கு ஐசிசி 1 மில்லியன் டாலர் பரிசு (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7 கோடி) வழங்கி கெளரவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் நாளை 2வது இடத்திற்குத் தள்ளப்படவுள்ள இந்திய அணிக்கு இதில் பாதித் தொகைதான் பரிசாக கிடைக்கும்.

ஐசிசி தரவரிசை

ஐசிசி தரவரிசை

ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2வது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியா தனது முதலிடத்தை ஆஸ்திரேலியாவிடம் பறி கொடுக்கப் போகிறது.

நாளைய வெற்றி

நாளைய வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான கிறிஸ்ட் சர்ச் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 201 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்றைய நான்காவது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்களுடன் இருந்தது. நாளை அது 131 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்.

2-0 வெற்றி

2-0 வெற்றி

முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. 2வது போட்டியிலும் நாளை ஆஸ்திரேலியா வெல்லப் போகிறது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் அது தொடரை வெல்லும்.

முதலிடம்

முதலிடம்

நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் அது ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும். இந்தியா 2வது இடத்தைப் பிடிக்கும்.

ஒரு வேளை நியூசிலாந்து வென்றால்

ஒரு வேளை நியூசிலாந்து வென்றால்

ஒரு வேளை நியூசிலாந்து வென்று விட்டால் நாம் தொடர்ந்து முதலிடத்திலேயே இருப்போம். ஆஸ்திரேலியா 3வது இடத்திற்குப் போய் விடும்.

டிரா ஆனால்

டிரா ஆனால்

ஒரு வேளை போட்டி டிரா ஆனால் (இதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு) அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகவே மாறும். ஆஸ்திரேலியாவே முதலிடத்தைப் பிடிக்கும்.

ஏப்ரலில் பரிசு

ஏப்ரலில் பரிசு

ஏப்ரல் 1ம் தேதி வரை தரிவரிசைக்கான கட் ஆப் காலம் ஆகும். அதன் பின்னர் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ஐசிசி 10 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 7 கோடி பரிசாக அளிக்கும்.

2வது இடம் பிடித்தால்

2வது இடம் பிடித்தால்

ஒரு நாளை நாம் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டால் நமக்கு பாதி தொகைதான், அதாவது ரூ. 3.50 கோடி மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தரவரிசை

தற்போதைய தரவரிசை

தரவரிசையில் தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகியவை 10 இடங்களில் உள்ளன.

Story first published: Tuesday, February 23, 2016, 15:40 [IST]
Other articles published on Feb 23, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+