Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆரம்பம் நல்லாத்தான் இருந்திச்சி.. இங்கிலாந்திடம் ஃபினிஷிங் சரியில்லையேப்பா! சென்னை டெஸ்டில் ட்விஸ்ட்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் பல புது சாதனைகள் பிறந்துள்ளன.

*இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் முதல் 104 ரன்களை விக்கெட் இழப்பின்றி 39.3 ஓவர்களில் சேர்த்தது. அடுத்த 103 ரன்கள் எடுப்பதற்குள் (மொத்தம் சேர்த்த ரன்கள் 207), 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அதற்கு ரவீந்திர ஜடேஜாவின் அபார பந்து வீச்சு காரணம். மொத்தம் 7 விக்கெட்டுகளை அவர்தான் அசத்தலாக தூக்கினார். என்ன இருந்தாலும் முன்னாள் சிஎஸ்கே வீரர் இல்லையா. பிட்ச் அங்குலம், அங்குலமான அத்துப்படியாகியுள்ளது அவருக்கு.

India set new Test record with win in Chennai

* 477 மற்றும் அதற்கு மேல் ரன்களை முதல் இன்னிங்சில் குவித்த ஒரு அணி, இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளது என்றால் அது இங்கிலாந்துதான்.

* முதல் 22 டெஸ்டுகள் ஆடிய பிறகு அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்றால் அது ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக். 17 போட்டிகளில் வெற்றி பெறச் செய்தார். அடுத்ததாக அதே அணியின் ரிக்கி பாண்டில் 15 போட்டிகளில் அவரது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். விராட் கோஹ்லி, மைக்கேல் வான், பிரேர்லே மற்றும் ஹச்செட் ஆகியோர் 14 போட்டிகளில் வெற்றியை ஈட்டித் தந்தனர்.

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் போட்டி வெற்றிகளில், இப்போதைய இங்கிலாந்துக்கு எதிரான தொடரும் இணைந்துள்ளது. 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது இந்தியா. தற்போது 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

Story first published: Tuesday, December 20, 2016, 18:05 [IST]
Other articles published on Dec 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+