உலகக் கோப்பையில் முதல் முறையாக.. அடுத்தடுத்த போட்டிகளில் 5 அணிகளை ஆல் அவுட்டாக்கிய இந்தியா!
ஹாமில்டன்: உலகக் கோப்பை போட்டிகளில் முதன் முறையாக இந்திய அணி, அடுத்தடுத்து 5 அணிகளை ஆல் அவுட்டாக்கி புதிய சாதனை படைத்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பை போட்டியில், இந்தியா துவக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வருகிறது. இந்தியா நடப்பு உலக கோப்பையில் 4 லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 4 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள ஹாமில்டன் நகரில் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள ஹாமில்டன் நகரில் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.

அயர்லாந்து
டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. பிற போட்டிகளை போன்றே இந்த போட்டியிலும் டோணி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக ஃபீல்டிங் செய்தது.

259 ரன்கள்
அயர்லாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.

ஆல் அவுட்
உலகக் கோப்பை போட்டிகளில் தன்னை எதிர்த்து விளையாடிய 5 அணிகளையும் இந்தியா ஆல் அவுட் செய்துள்ளது.

சாதனை
உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி முதன்முறையாக தொடர்ந்து 5 முறை தன்னை எதிர்த்து விளையாடிய அணிகளை ஆல் அவுட் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications