Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: நாட்டையும், ராணுவ வீரர்களையும் விட டிஆர்பி, பணம் தான் முக்கியமா? மனோஜ் திவாரி கேள்வி

மும்பை: ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றத்திற்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. எனினும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவதால் அந்த நாட்டுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட கூடாது என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர்," முதலில் நான் ஆசிய கோப்பை போட்டியை புறக்கணிக்க போகிறேன். இந்த தொடரில் ஒரு போட்டியை கூட நான் பார்க்க விரும்பவில்லை. இந்த தொடருக்கான இந்திய அணி என்னவென்று கூட எனக்கு தெரியாது.

India vs Pakistan

இதைப் பற்றி எல்லாம் நான் கண்டுகொள்ளவே இல்லை. ஏனென்றால் தனிப்பட்ட முறையில் இந்த தொடரை நான் எதிர்க்கின்றேன். ஏனென்றால் நம் நாடு இருக்கும் நிலையில் இந்தத் தொடரை பார்க்க எனக்கு பிடிக்கவில்லை. பஹல்காமில் யாருமே எதிர்பாராத அளவிற்கு மிகப்பெரிய துயர சம்பவங்கள் நடந்திருக்கின்றது.

அந்த தருணத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.பஹல்காம், புல்வாமா என தொடர்ந்து துயர சம்பவங்கள் நடத்தப்படுகின்றனர். இப்படி இருக்கும் போது நம்மால் எப்படி கிரிக்கெட் போட்டியில் மகிழ்ச்சியாக விளையாட முடியும். இது என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இதனால் இந்த தொடரை தனிப்பட்ட முறையில் நான் புறக்கணிக்கிறேன்.

டிஆர்பிக்காகவும் பணத்திற்காகவும் இந்த போட்டியில் நடைபெறுகிறதா? ஐசிசி இந்த போட்டியை நடத்தியே ஆக வேண்டும் என்று நினைத்தால்,அது பிடிக்காத பட்சத்தில் நாம் இந்த போட்டியை பார்க்க கூடாது. ஒருபுறம் தீவிரவாதிகளை தொடர்ந்து அனுப்பும் பாகிஸ்தான் நாட்டுடன் கிரிக்கெட் விளையாடி என்ன பயன் ?

அவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் போது உறவினர்களை இழந்த குடும்பத்தினரின் மனது எவ்வாறு இருக்கும். போரில் உயிரிழந்த போர்வீரரின் குடும்பத்தின் மனநிலை எவ்வாறு இருக்கும். எனவே பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் இந்தியா விளையாடக் கூடாது என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார். ஆசிய கோப்பை போட்டியில் அதிகபட்சமாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை முதல் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, August 31, 2025, 10:02 [IST]
Other articles published on Aug 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+